தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் ஸ்ரீ நிவேதா பெண்கள் தையலக வளாகத்தில் தீரன் சின்னமலை 221 வது ஆண்டு நினைவு நாள் மலர் அஞ்சலி…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் 31 – 7- 2026 காலை 10.30 மணிக்கு ஸ்ரீ நிவேதா பெண்கள் தையலக வளாகத்தில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 221 _ வது ஆண்டு நினைவு நாள் மலர் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மன்றத் தலைவர் டாக்டர் மா. சிவக்குமார் தலைமை ஏற்று தீரன் சின்னமலை ஐயா அவர்களின் வீர வரலாற்றை நினைவு கூர்ந்தார்.

நிகழ்ச்சியில் அஞ்சல் துறை பணி நிறைவு என். சிவசண்முகம், சமூக ஆர்வலர்கள் ஷைனி சிவக்குமார், சி. கண்ணபிரான், கே. ரங்கநாதன், நரசிபுரம் கே. உதயகுமார், ரவிக்குமார் காளீஸ்வரி, ஏ. தங்கவேல், மலர்விழி, சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed