சாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்திட சிறப்பு சட்டம் இயற்றிட தமிழக அரசு அறிவித்துள்ள நீதிபதி பாஷா ஆணையத்திடம்
தீண்டாமை ஒழிப்பு முன்னணி கொடுத்த பரிந்துரைகள் குறித்து விவாதிக்க நேற்றைய தினம் ஆணையம் தீண்டமை ஒழிப்பு முன்னணியை அழைத்தது.
04.02.26 அன்று மாலை 5 மணிக்கு ஆணையத்தின் உறுப்பினர்கள் நீதிபதி பாஷா, மற்றும் திருமிகு. பழனிக்குமார் மற்றும் இராமநாதன் ஆகியோர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சிறப்பு தலைவர் தோழர். S.K மகேந்திரன் மாநில தலைவர் தோழர் த. செல்லக்கண்ணு பொதுச்செயலாளர் தோழர் பி.சுகந்தி, மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் தோழர் கே.சுவாமிநாதன், மாநில நிர்வாகி தோழர். கிருஷ்ணவேணி,
முக்கியத்துவம் வாய்ந்த இந்த பரிந்துரைகளை உருவாக்குவதற்கு உதவிய வழக்கறிஞர்கள் தோழர்கள் உதயகுமார்,காரல் மார்க்ஸ்,
இவர்களோடு,சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்ட கோகுல்ராஜின் சகோதரர் கலைச்செல்வன், கிருஷ்ணகிரி சுபாஷின் இணையர் அனுசுயா, ஆகியோருடன் கலந்துரையாடல் நடத்தினர்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சாதி ஆணவ படுகொலைககளை தடுத்து நிறுத்திட களத்தில் மேற்கொண்ட பல்வேறு போராட்டங்கள், தலையீடுகளுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கருதுகிறது.
