அரசுப் பொறியாளராக இன்று 27 ஆம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கிறேன்…!! நூலாசிரியர் கோ.லீலா பெருமிதம்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
ஜூன் 14, 2000 ம் ஆண்டு காஞ்சீபுரத்தில் அரசு பொறியாளராக பதவி ஏற்றுக்கொண்ட நாள்.
சற்றே,திரும்பி பார்க்கிறேன்
காஞ்சீபுரம், சென்னை, கோயம்புத்தூர், தஞ்சாவூர், பொள்ளாச்சி என தலைமையகமாக கொண்டு பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி இருக்கிறேன்.
செல்லும் ஒவ்வொரு அலுவலகமும், நான் விடைபெறும்போது மேம்பட்டிருக்கும் வகையில் பணியாற்றி இருக்கிறேன் என்பது மனநிறைவு.
உதவி செயற்பொறியாளராக பதவி உயர்வு பெற்றபோது பிஏபி யை விட்டு வேறிடத்தில் ( என் விருப்பத்தின் பேரில்தான்) பணியமர்வு பெற்று பணியமர்ந்த என்னை, நீங்கள் இரு மாநில நதிநீர் பங்கீடு அலுவலகத்திற்கு வேண்டுமென அரசிடம் பேசி, ஒரே நாளில் மீண்டும் பிஏபி திட்டத்திற்குள் வரவழைத்ததால், இன்று நான் பெற்றிருக்கும் மனநிறைவு ஏராளம்.
தந்தை உள்ளத்துடன், இவற்றை எனகளித்த பொறிஞர். இ.தமிழரசன் சார், மேனாள் தலைமை பொறியாளர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் பேரன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்து இடங்களிலும் Best Performer award ( from our Department and from World Bank) பெற்றிருக்கிறேன்.
சர் விஸ்வேஸ்வரய்யா சீர்மிகு பொறியாளர் விருது,Anti -Corruption Award
Center for Change of Excellence awarded me for my service towards Save Water and Food for all forever. and few more… விவசாயிகளின் புன்னகையுடன் கூடிய பாராட்டுக் கடிதங்கள்
காஞ்சீபுரத்தில் இருந்து இன்று வரை விவசாயிகள், ஆதார பணியாளர்கள், ஓட்டுநர்கள், அமைச்சுப் பணியாளர்கள், உதவி பொறியாளர்கள், மற்றும் சக பொறியாளர்கள்,
உயர் அதிகாரிகள், ஓய்வு பெற்ற மூத்த பொறியாளர்கள், பிற துறை பொறியாளர்கள், பிறமாநில பொறியாளர்கள் என அனைவரின் பேரன்பிற்கும், பெரும் மரியாதைக்கும் உரியவராக காலம் என்னை வைத்திருக்கிறது.
இன்று வரை, எனது பணிகளில் சுதந்திரமாக செயல்பட, அனுமதி அளித்திருப்பதோடு, Additional Chief Secretary முன்பு
கலந்தாய்வு கூட்டத்திற்காக கூடியிருந்த தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த அனைத்து நீர்வள துறை உயர் அதிகாரிகள் முன்பும் மனம் திறந்து எனது அறிவையும், பணி சிறப்பையும் கூறி அறிமுகப்படுத்தியதோடு, நம்பிக்கையோடு, ஆனமலையார், நல்லார் திட்டம் குறித்து விளக்கும் பணியை எனக்களித்த இந்நாள் தலைமை பொறியாளர், பொறிஞர்.முருகேசன் சார், தலைமை பொறியாளர், கோவை மண்டலம் அவர்களின் பெருந்தன்மைக்கு என் நன்றியும் பேரன்பும். (அங்கு இடம்பெற்றிருந்த ஒரே உதவி செயற்பொறியாளர் நான் மட்டுமே)
ஏரிகள் புனரமைப்பு பணிகளில் இருந்து, வாய்க்கால் சீரமைப்பு பணிகள், அணைகள் பராமரிப்பு ( ஆழியார், பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம்)
சமமட்டக் கால்வாய் பராமரிப்பு, ஆனமலையார் திட்டம், நீரார் நல்லார் நேரடி இணைப்புத் திட்டம் ஆகியவற்றின் Detailed Project Report தயாரிக்கும் குழு, நல்லாறு அணை கட்டும் தளத்திற்கு சென்றவர் என பல்வேறு பணிகளில் முதல் பெண் பொறியாளாராக பணியாற்றிய பெருமையை, எனது உயரதிகாரிகளும், தமிழ்நாடு அரசும், காலமும் எனக்கு வழங்கி மேன்மைபடுத்தி இருக்கிறது.
ஆதார பணியாளர்கள் 65 பேருக்கு அரசு ஊதியம் பெற கையெழுத்திடவும் மேற்கூறிய பராமரிப்பு பணிகளை பார்க்கவும் வாய்ப்பை வழங்கிய அன்றைய கண்காணிப்புப் பொறியாளர் பொ.முத்துசாமி சார் அவர்களும், (மேனாள் தலைமை பொறியாளர்) காலமும், தமிழ்நாடு அரசும் வழங்கினார்கள். இன்று 65 பேர் வீட்டில் மூன்று வேளை உணவும், குழந்தைகளின் கல்வியும் உறுதி செய்யப்பட்டிருப்பது என் வாழ்நாளின் மனநிறைவு
இந்நாளில், 21 நூல்கள் எழுதியிருக்கிறேன் என்பதிலும் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
சூழலியல் சார்ந்து இயங்க இன்று வரை நிறைய விடயங்களை சொல்லிக்கொடுத்தும், பகிர்ந்தும், ஒரு இளைய சகோதரியை ஊக்கப்படுத்துவது போல்
ஊக்கமூட்டும் பொறிஞர் சிவலிங்கம் சார் , மேனாள் தலைமை பொறியாளர், உறுப்பினர், சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழு அவர்களுக்கு, இந்நாளில் என் நன்றியையும் பேரன்பையும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
லீடர் தந்த உத்வேகம்தான் இன்றைய என்னுடைய இருப்பத்தியொரு நூல்கள்.
நேர்மையான பணி என்பது கையூட்டு வாங்காமல் இருப்பது மட்டுமன்று, பணியை நேசிப்பது, பணிக்கு அனுமதி பெற்ற விடுப்பு காலங்கள் தவிர மற்ற நாட்களில் பணி நேரத்தில் பணியில் இருப்பது, துறையில் இருந்து பெற்றுக்கொண்ட அறிவை, நடுநிலையோடு துறைசார் பணிகளுக்கு பயன்படுத்துவது, இளம் பொறியாளர்களை மேன்மையான பணியை அர்ப்பணிக்க மனதளவில் தயார் செய்வது.
பணியாளர்களுக்கு அரசு தரும் சலுகையை தடை செய்யாதிருத்தல், பணிநிமித்தம் கடிந்து பேசினாலும் ( அது பணிக்காக மட்டுமே) தனிமனித காழ்ப்புணர்வாக மாறாது அனைவரையும் அரவணைத்து செல்லுதல், அலுவலகத்தில் மதம் சார் பண்டிகைகளை கொண்டாடாது இருத்தல், எளியோரிடம் கனிவுடன் இருத்தல் போன்ற பல்வேறு செய்கைகளையும் உள்ளடக்கியதே நேர்மை என்பது.
இவற்றை, ஊழலற்ற பணிக்காக தமிழ்நாடு அரசின் விருதை பெற்ற எனது அப்பாவும் ( மேனாள் அக்கவுண்ட்ஸ் ஆஃபிஸர்,த.நா.மின்சார வாரியம் ), எனது உயர் அதிகாரிகளும் கற்று தந்தவை.
இந்நாளில், என் அம்மா , இயற்கை உடனுறை அப்பா, பேரன்பின் திருவுரு இயற்கை உடனுறை ஆரூயிர் தம்பி, தொல்லை தராத செல்லம் அன்பு மகள் லியா, மற்றும் உறவினர்கள். ஊக்கமளித்து துயர் காலங்களிலும், இன்றும், என்றும் உடன் நிற்கும் பேரன்பு தோழமைகள்,

எனது ஆசிரியர் பெருமக்கள், மற்றும் எனது உயர் அதிகாரிகள், விவசாயிகள், உடன் பணியாற்றும் பொறியாளர்கள், அமைச்சு பணியாளர்கள், ஆதார பணியாளர்கள், ஓட்டுநர்கள், பிற துறை மற்றும் பிற மாநில பொறியாளர்கள், என்றும் போற்றி ஊக்கமளிக்கும் மூத்த மற்றும் சக இலக்கிய உலக தோழமைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியும், பேரன்பும்.
இதுநாள் வரை, நான் பணியாற்றிய அனைத்து செயற் பொறியாளர்கள், கண்காணிப்புப் பொறியாளர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியும், பேரன்பும்.
இந்நாளில் எனக்கு வாய்த்த கம்யூனிச கொள்கை கொண்ட என் குடும்ப பின்னணிக்கும், சமூக அக்கறையோடு பணியாற்ற வேண்டுமென எனக்குள் உத்வேகத்தை விதைத்த தந்தை பெரியாரின் சிந்தனைக்கும், ஆசிரியர் கி.வீரமணி அய்யா அவர்களுக்கும், அறிவை விரிவு செய்து கொண்டே இருக்க வேண்டும் என உணர்த்திய என்றென்றும் என் வியப்புக்குரிய அண்ணல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் சிந்தனைக்கும் என் பணிவான நன்றியை சமர்ப்பிக்கிறேன்.
ஒரு போர் வீரனைப் போல் ஓய்வில்தான் இருந்தேன்
ஓய்ந்துவிடவில்லை.
A_Lioness_never_forgets_to_roar
- Leela.G
அறிவை அதிகாரத்தால் அடக்க முடியாது…
(இச்சொற்கள் உரியவர்களுக்கு மட்டும்…)
நான் என்பது நானல்ல, இத்தனை நல்லுள்ளங்களின் கூட்டு வளர்ப்பும், ஆசியும்.
அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும், பேரன்பில் நனைத்த நன்றியும்
💐💐💐.
கோ.லீலா

