

உலக முத்த தினமாம்…!! சிறப்பு கவிதை – கவிஞர் குடந்தை அனிதா, அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
உலக முத்த தினமாம்…!!
❤️
ஒரு லட்சம் கடுகை
அஞ்சறைப் பெட்டியில்
வைத்துப் புழங்கும் அவளுக்கு
அவன் தரும் முத்தத்தை
சேமிக்க இடமில்லாமல்
வான்வெளியில்
நட்சத்திர பெட்டகத்தில்
இட்டு நிரப்பி விடுகிறாள்.
பகலெல்லாம்
சூரிய ஒளியில் ஒளித்து
இரவெல்லாம்
எண்ணிக்கை சரி பார்த்தும்
கணக்கு நேராவதில்லை.
கவிஞர் குடந்தை_அனிதா
✍️
மீள்
வாழ்த்துகிறது…
செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்


