
03 – 03 – 2026
கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் இல்லாமல் போய் இருந்தால் அ.தி.மு.க என்ற ஒரு கட்சியே உருவாகி இருக்க முடியாது !
மறைந்த தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களின் மறைவில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தாமல் போன முன்னாள் முதல்வர் மாண்புமிகு எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களை மக்கள் திலகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆத்மா மன்னிக்காது !தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் கண்டனம் ..!
⚫
பொதுவுடைமைத் தலைவர் தோழர். ஆர்.நல்லகண்ணு அவர்களின் இறுதி யாத்திரையின்போது அனைத்துக்கட்சி தலைவர்களும் தண்ணீர், சாப்பாடு ஏதுமின்றி காலையிலிருந்து உடல் அருகே அமர்ந்திருந்தனர்.
அவர்கள் மட்டுமின்றி திரையுலகப்பிரமுகர்களும் வந்து மரியாதை செலுத்தினார்கள்.
த.வெ.க தலைவர் விஜய் கூட. ( குடித்து விட்டு & அங்கு கூட செய்தியாளர்களிடம் பேச துப்பு இல்லை ) நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
ஆனால் அ.தி.மு.க. சார்பில் ஒரே ஒரு நபர் மட்டும் வந்ததாக அறியப்படுகிறது. ஆனால் இந்த நாட்டை ஆண்ட எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மட்டும் வரவில்லை.
இவர்கள் மறைந்த மாண்புமிகு. எம்ஜிஆர் அவர்களின் வழித்தோன்றல்கள், தலைவர்கள் என மார்தட்டிக்கொள்கிறார்கள்.
எம்ஜிஆரின் இரக்க குணம் என்ன, பழகும் பண்பு என்ன, அவரைப்பின் பற்றுபவர்கள் இப்படி பேதம் பார்க்கலாமா? தலைவரே இப்படி இருந்தால் தொண்டர்களுக்கு நல்வழிப்படுத்துவது யார்? மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர். உயிருடன் இருந்திருந்தால் அ.தி.மு.க. சார்பில் வராமல் இருந்திருப்பாரா?
அந்த பண்பு அ.தி.மு.க தலைவருக்கு ஏன் இல்லை.
ஒருத்தருடைய மறைவிற்கு போகவேண்டும் என்பது யாருக்கும் கட்டாயமில்லை. அவரவர் விருப்பம்தான். ஆனாலும் மறைந்தவர் நாடே போற்றும் உத்தமரல்லவா?
தோழர். நல்லகண்ணு எத்தகைய சிறப்பு வாய்ந்த மனிதர், !
அவர் வாழ்ந்தகாலத்தில் நாமும் வாழ்கிறோமே என ஆத்ம திருப்தி கொண்டு் ஆயி்ரக்கணக்கானோர் வந்து மாலையிட்டு வணங்கிச் சென்றனர். கட்சி்பேதம் இன்றி அனைவரும் வீர வணக்கம் செலுத்தினர். வயதில் முதியவரான ஆசிரியர். ஐயா.வீரமணி அவர்கள் கூட இறுதி யாத்திரையில் மட்டுமின்றி ராஜீவ்காந்தி மருத்துவமனையில் எல்லா தலைவர்களோடும் இறுதி வரை அமர்ந்திருந்தார்.
ஐயா பழ நெடுமாறன், வைகோ உட்பட எத்தனை மூத்த தலைவர்கள் வந்து மரியாதை செலுத்தினர்.
மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு மரியாதை வழங்கி மிகப் பெரிய கௌரவம் தந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
அன்று….. கலைஞரின் ஆளுமையின்போது கணக்கு சம்பந்தப்பட்ட விவாதத்தின் மூலம் மதிப்பிற்குரிய புரட்சி நடிகர் எம்.ஜிஆர். கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட போது, முதன்முதலில் ஆதரவுக் கரம் நீட்டியவர் அன்றைய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் மறைந்த தோழர். எம். கலியாணசுந்தரம் அவர்கள்.
அவருடைய வழிகாட்டுதலின்படி ஆலோசனைப்படி உருவானதுதான் அ.தி.மு.க. என்ற இந்த கட்சி.
அதன் பின்பும் அவருடைய ஆதரவாலும் வழி காட்டுதலின்படியும் தான் மாண்புமிகு செல்வி ஜெயலிதா அவர்களும் கம்யூனிஸ்டுகளுடன் கடைசிவரை இணக்கமாகவே இருந்தார்.
இடையில் நேராக முதல்வராக வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு வரலாறு தெரிய வாய்ப்பில்லை. அ.தி.மு.க. நன்றி் மறப்பது நன்நன்று.
பத்திரிகையாளர்கள் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் “நீங்கள் ஏன் வரவில்லை” என்கேட்டதற்கு “என் தாயார் மறைவிற்கு கம்யூனிஸ்டுகள் வந்து துக்கம் விசாரிக்கவில்லை, நான் நல்லகண்ணு இழப்பிற்கு செல்ல வேண்டுமா ” என சொல்லியிருக்கிறார். எத்தகைய சிறுபிள்ளைத்தனமான பதில் !
உலக மக்களுக்காக தன் உடல், பொருள், ஆவி அத்தனையும் வழங்கியவருக்கு ஒரு மரியாதை கூட செலுத்த முடியாதவர் தமிழக மக்களை எப்படி நல்வழியில் நடத்துவார்.?
ஆனால்
கம்யூனிஸ்டுகள், அன்பு, இரக்கம், பாசம், நேர்மை, மனிதாபிமானம் மிக்கவர்கள். எடப்பாடி பழனிச்சாமின் தாயார் மறைவின்போது அப்படத்திற்கு பூப்போட்டு மரியாதை செய்ததற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள இப்புகைப்படமே சாட்சி.
தோழர். ஆர். நல்லகண்ணு் அவர்கள், விண்ணுக்கும் போகாமல், மண்ணுக்கும் போகாமல் அவர் நேசித்த மக்களிடமே தன்னை ஒப்புக்கொடுத்துக்கொண்டார்.
அவர் பொதுவுடமைவாதி என்பதால் தன் உடலையே மக்களுக்கு பொதுவுடமையாக்கிவிட்டார்.
இத்தகைய தலைவருக்கு அஞ்சலி செலுத்தாத அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களை தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் வன்மையாக் கண்டிக்கிறோம்.
இது போன்ற மாபெரும் ஈடு இணை இல்லா மனிதர்களை கூட மதிக்காதவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அரசியலில் இருந்தே வெளியேற வேண்டும் !
தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ்
மாநில தலைவர், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்
94441 11494
⚫⚫⚫⚫⚫⚫⚫⚫

io



