எட்டயபுரம் குறித்து விரைவில் புத்தகம் வெளியிடும் மூத்த வழக்கறிஞர் கே.எஸ் ராதாகிருஷ்ணன்…!! அக்கப்போர் நாளிதழ் Akkappore.com சொடுக்குங்க

தமிழகத்தின் மிக மூத்த அரசியல்வாதியும், நம் கோவில்பட்டி மண்ணின் மைந்தருமான திரு. Radhakrishnan K S அவர்களை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன்.

எட்டயபுரம் குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே தினமணியில் அவர் எழுதிய கட்டுரை குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

மேலும் எட்டயபுரம் குறித்து விரைவில் புத்தகம் ஒன்றை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்தார். எட்டயபுரம் வரலாறு குறித்து பல சுவாரசியமான தகவல்களை அவர் மூலமாக அறிந்து கொள்ள முடிந்தது.

எட்டயபுரம் அரண்மனையில் தற்போது நாம் மேற்கொண்டு வரும் புனரமைப்பு பணிகள் குறித்தும் ஆர்வமாக கேட்டறிந்தார். ஊருக்கு வரும்போது அரண்மனைக்கு அவசியம் வர வேண்டும் என அன்புடன் அவருக்கு அழைப்பு விடுத்தேன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top