ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தொகுப்பூதிய அலுவலக ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000 வழங்க அமைச்சரிடம் மனு…!!அக்கப்போர் நாளிதழ், சொடுக்குங்க akkappore.news

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தொகுப்பூதிய அலுவலக ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000 வழங்க வேண்டி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் 9 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது
திருநெல்வேலி, செப்.20,2026 – ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தொகுப்பூதிய அலுவலக ஊழியர்கள் சங்கம் சார்பில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பொருநை அருங்காட்சியகத்திற்கு வருகை புரிந்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆ.ராஜ்மோகன் அவர்களை நேரில் சந்தித்து, தொகுப்பூதிய அலுவலக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.
2026–27 ஆம் நிதியாண்டிற்கான ஊதிய உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை இந்த ஆண்டுக்கான ஊதிய உயர்வை கடந்த 2014ஆம் ஆண்டு( Pay Fixation ) முறையில் ஊதிய மறு நிர்ணயம் செய்து வழங்கப்பட்டது போன்று, தற்போது குறைந்தபட்ச ஊதியம் பெறும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.30,000 வழங்க வேண்டும் , என சங்கத்தின் சார்பில் கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

மேலும், தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ESI, மருத்துவக் காப்பீட்டு வசதி, குடும்ப நலப் பாதுகாப்பு நிதி, காலியாக உள்ள பணியிடங்களில் விருப்ப மாறுதல் வழங்குதல் மற்றும் காலிப் பணியிடங்களை நிரப்புதல், தொகுப்பூதிய ஊழியர்களுக்கு விபத்து மற்றும் உடல்நிலை சரியில்லாத பொழுது மருத்துவ ஆவணங்களின் அடிப்படையில் மருத்துவ ஆவணங்களின் அடிப்படையில் மருத்துவ விடுப்பு வழங்க வேண்டுதல் உள்ளிட்ட ஒன்பது அம்ச
கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சரிடம் சங்க நிர்வாகிகள் வழங்கினர். கோரிக்கைகள் தொடர்பாக பரிசீலிக்க சிறிது கால அவகாசம் தேவைப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்ததாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தொகுப்பூதிய அலுவலக ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் த. அசோக்குமார், நிர்வாகி து. சங்கர சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



