சோழவந்தான் அரசு உதவி பெறும்
பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு மற்றும் எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது

சோழவந்தான் ஜூலை 5

சோழவந்தான் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளியில் விலையில்லா நோட்டு மற்றும் எழுது பொருள்கள் வழங்கும் விழா பள்ளியின் தாளாளர் அருள்திரு எபினேசர் துரைராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியை திருமதி பிரேமா அன்ன புஷ்பம் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். முன்னாள் தலைமை ஆசிரியர் ராபின்சன் செல்வகுமார் முன்னிலை வகித்தார் இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு வருடமும் சுமார் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள விலையில்லா நோட்டுகள் மற்றும் எழுது பொருட்கள் வழங்கி வரும் LIC நிறுவனத்தில் பணி புரியும் முத்துராமன் ஆசிரியர் ஜோயல் ராஜ் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

.

பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் கௌரவ ஆலோசகர்ஆதி பெருமாள்ஆசிரிய பெருமக்கள் பெற்றோர்கள்விழாவில் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.அனைத்து மாணவ மாணவியருக்கும் விலையில்லா நோட்டு மற்றும் எழுத பொருட்களை முத்துராமன் மற்றும் அவரது துணைவியார் மற்றும் ஜோயல் ராஜ்

வழங்கிவாழ்த்துறையும் வழங்கினார்கள் . மாணவ மாணவியர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பிரேம குமாரி திவ்யா ஏஞ்சல் சுகந்தி உட்பட பணியாளர்கள் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியை வனிதா சாந்தகுமாரி நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed