நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை நாகூர் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ நல வாழ்வியல் மையத்தில் 120 கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு இயற்கை மருத்துவ தாய் – சேய் நலப்பெட்டகம்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

உலக தாய்ப்பால் ஊட்டும் வாரம் குறித்து விழிப்புணர்வு முகாம் ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 7 ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்ட சுகாதார அலுவலர் Dr. பிரதீப் V. Krishnakumar MBBS., DPH., DIH., MBA. மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் Dr. ரெ. கனிமொழி, BSMS, MD, வழிகாட்டுதலுடன் நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவ நலவாழ்வு மையத்தில் நடைபெற்று வருகிறது.


இம்முகாம் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 4. 2026 ஈஜிஎஸ் பிள்ளை யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் முகாமிற்கு வந்த கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவ உணவு வழங்கப்பட்டது.


முகாமின் சிறப்பு விருந்தினர்களாக நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் Dr. சத்தியமூர்த்தி MBBS, காது, மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர், மற்றும் நாகூர் அரசு நகர ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அலுவலர் சோபியா, MBBS மற்றும் நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை பல் மருத்துவர் நிபுணர் Dr. சியாமளா தேவி BDS, நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை செவிலியர் கண்காணிப்பாளர் மோகனா மற்றும் இஜிஎஸ் பிள்ளை யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி முதல்வர் Dr. எழில் ரத்தினகுமாரி BNYS, MD, ஆகியோர் கலந்து கொண்டனர்.


நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவர் ஆலோசகர் பேராசிரியர். மரு. க. முத்துகிருஷ்ணன் BNYS, உலக தாய்ப்பால் ஊட்டும் வார விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். முகாமிற்கு ஆதரவாக நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், பல்நோக்கு பணியாளர்கள் அனைவரும் இணைந்து செயல்பட்டனர்.


நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை நாகூர் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ நல வாழ்வியல் மையத்தில் 120 கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு கருவேப்பிலை பொடி முருங்கை பொடி நெல்லிக்காய் பொடி தேன் அடங்கிய யோகா மற்றும் இயற்கை மருத்துவ தாய் சேய் நலப் பெட்டகம் மற்றும் கர்ப்ப கால யோகா மற்றும் மூச்சுப் பயிற்சிகள் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கான யோகா மற்றும் மூச்சு பயிற்சிகள் அக்குபிரஷர் சிகிச்சைகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் கர்ப்பகால நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம், கர்ப்பகால தைராய்டு சுரப்பியல் பிரச்சனை மலச்சிக்கல் முடி உதிர்தல் கை கால் வலி சத்து குறைபாடு இரத்த சோகை ஆகியவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed