

அரசு பள்ளியில் பாடம் போதிக்கும் ஆசிரியர்கள் சரிவர பாடம் நடத்துவதில்லை என்று பெற்றோர்கள் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். நான் உபதலை அரசு பள்ளியில் படித்த காலத்தில் ஆசிரியர்கள் எப்படி எல்லாம் போதித்தார்கள் என்பதை நான் அறிவேன்.
மதியம் 1-2 மதிய உணவு வேளை. தமிழாசிரியர்கள் திரு வெங்கடகிரி, சிவனேசன் இருவரும் 1.30 மணிக்குச் சிறு டெஸ்ட் வைப்பார்கள் திரு. போஜன் சார்’, திரு ஜான், திரு பரமன் சார், மூவரும் அவ்வளவு எளிமையாக கணிதம் கற்பிப்பார்கள். திரு. நரசிம்மன் சார், ஆங்கிலப் பாடத்தையும் வரலாற்றுப் பாடத்தையும் சுவை பட விளக்குவார்.
திருமதி கிரேஜி டீச்சர், திரு மகாலிங்கம் சார் இருவரும் அறிவியல் பாடத்தை எளிமையாக நடத்துவார்கள் திரு நாராயணன் சார் ஓவிய ஆசிரியர். அதேசமயம் நீதி போதனை கதைகள் சொல்வார். இவர் என் பள்ளி குருநாதர்.
தலைமை ஆசிரியர் திரு நஞ்சையன் சார் எளிமையாக ஆங்கில இலக்கணம் நடத்துவார். இப்படி 10ம் வகுப்பிற்குப் பாடம் எடுத்தவர்கள் யாவரும் கண்டிப்புடனும் கனிவுடனும் பாடம் நடத்தினார்கள். இல்லை எனில் நான் முன்னேற்றம் அடைந்திருக்க முடியாது.

