
பத்திரிக்கையாளர்களை பழிவாங்குவது ஜனநாயக படுகொலை…!! கொதிக்கிறார், முன்னாள் கவுன்சிலர் அ.புவனேஸ்வரி, திராவிட முன்னேற்றக் கழகம், சேலம் மாநகராட்சி.
அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

விஜய் வீட்டை விட்டு வெளியே வருகிறார் என்றால் அவர் கேட்டு வாசல்ல கேமராவை வைப்பார்கள் ஊடகங்கள், பிறகு பனையூர் இல்லம் சென்று வீட்டுக்குள் சென்று கேட்ட மூடும் வரை அந்த கேமரா அவரையே பாலோ பண்ணும்.
இடையில் வர்ணனை விஜய் சார் கார் ஏறிவிட்டார், வீட்டில் இருந்து கிளம்பி விட்டார், தண்ணீர் குடித்தார், கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம் ரசிகர்களை பார்த்து கையசைத்தார்.
ஒரு மணி நேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு நான்கு மணி நேரமாக கார், மக்கள் வெள்ளத்தில் மிதந்து சென்றது. கை அசைத்தார், கொட்டாவி விட்டார், இப்படி எல்லாம் பில்டப் கட்டி ப்ரமோஷன் பண்ணினாலும்.
முதல்வர் விஜய் அவர்களோ உங்களை பத்திரிக்கையாளராகவும் மதிக்கவில்லை மனிதனாகவும் மதிக்கவில்லை நீங்க உள்ள வந்துருங்கன்னு தகரம் அடிச்சு மறைத்தார்,
இதையெல்லாம் அவமானத்தையும் பொறுத்துக் கொண்டு பொறுமையாக தானே இருந்தீர்கள்.
பிறகு ஏன் புதிய தலைமுறை மூத்த பத்திரிக்கையாளர்,நெறியாளர், விஜயன் சார் அவர்களை இப்படி அழைக்களிக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் சட்டப்படி செய்ய வேண்டும் அல்லவா.?
ஜனநாயகத்தின் நாலாவது தூண் பத்திரிக்கை துறை.
பத்திரிக்கையாளர்களை பழிவாங்குவது ஜனநாயக படுகொலை.
இனிமேலாவது ஊடக தர்மம் உண்மையாக செயல்படுமா?
முன்னாள் கவுன்சிலர் அ.புவனேஸ்வரி, திராவிட முன்னேற்றக் கழகம், சேலம் மாநகராட்சி.




