
வங்கி மேலாளரின் கன்னத்தில் பளார் விட்ட வழக்கு: மு.க.அழகிரி மகள் கயல்விழி கைதாகி ஜாமீனில் விடுதலை…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
சென்னை: வங்கி மேலாளரின் கன்னத்தில் அறைந்த வழக்கில் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி கைதாகி ஜாமீனில் விடுவிக்கப் பட்டுள்ளார்.
சென்னை அடையார் சாஸ்திரி நகரில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் எஸ்.பி.ஐ. வங்கி கிளை இயங்கி வருகிறது.
கடந்த 20-ம் தேதி அந்த கட்டிடத்தில் உள்ள ‘லிஃப்ட்’ திடீரென பழுதடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் வங்கிக்கு வந்த முதியவர்கள், மாற்றுத்
திறனாளிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் படிக்கட்டுகளைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால் சிரமம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக வங்கிகிளை மேலாளர் ஹர்ஷீன்சிங், கட்டிட பராமரிப்பு பொறுப்பில் இருந்த கயல்விழியின் உதவியாளரை தொடர்புகொண்டு லிப்ஃடை உடனடியாக சீரமைக்குமாறு கண்டிப்புடன் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கயல்விழி நேரடியாக வங்கிக்கு சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஆத்திரமடைந்து, கிளை மேலாளர் ஹர்ஷீன் சிங்கின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார்.
இந்த சம்பவம் மேலாளர் அறையில் பொருத்தப்பட் டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
இந்த காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வங்கியின் முதன்மை மேலாளர் நமச்சிவாயம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் சாஸ்திரி நகர் போலீஸார் கயல்விழி மீது கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசார ணையை தொடங்கினர்.
இதற்கிடையில், போலீஸார் அனுப்பிய சம்மனின் பேரில் கயல்விழி நேற்று மதியம் 1 மணியளவில் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் ஆஜரானார்.
அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப் பட்டது. விசாரணையின் போது, சம்பவம் தொடர்பாக அவர் அளித்த விளக்கங்கள் அனைத் தும் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோ பதிவாகவும் பதிவு செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
விரைவில் குற்றப்பத்திரிகை
விசாரணை முடிவில் கயல்விழி கைது செய்யப்பட்டு, பின்னர் போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விசாரணை நிறைவடைந்ததும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் நட வடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
