கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி மறுத்த மத்திய அரசை கண்டித்தும்,உடனடி அனுமதி கோரியும் கோவை வருமான வரி அலுவலகம் முற்றுகை போராட்டம்…!! அக்கப்போர் நாளிதழ், akkappore.news சொடுக்குங்க

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி மறுத்த மத்திய அரசை கண்டித்தும்,உடனடி அனுமதி கோரியும் கோவை வருமான வரி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது.

நாள் : 27/07/2026 | நேரம் : காலை 11.00 மணி

இடம் : வருமான வரி அலுவலகம், பந்தய சாலை, கோவை

**கோவையின் உரிமைக்கான குரல்!

கோவை மெட்ரோ ரயில் வேண்டும்!**

இந்தியாவில் 19 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு 2011 ம் ஆண்டு அறிவித்தபோது, அதில் கோவை மாநகரமும் இடம்பெற்றிருந்தது.

இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் திட்டங்களை உருவாக்கிய “மெட்ரோ மேன்” ஸ்ரீதரன் அவர்கள் 25.10.2013 அன்று கோவைக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். கோவை மாநகரம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மிகவும் பொருத்தமான நகரம் என்று கோவை கொடிசியா அரங்கில் அறிவித்தார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற அதிமுக உட்பட பல கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும், கோவை மெட்ரோ ரயில் திட்டம் முக்கிய வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், தேசிய மகளிர் அணி தலைவருமான சகோதரி வானதி சீனிவாசன் அவர்கள், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவித்தார்.

மேலும், பாஜகவின் கோவை நாடாளுமன்றத் தேர்தல் 2024 அறிக்கையிலும் மெட்ரோ ரயில் திட்டம் முக்கிய அறிவிப்பாக இடம்பெற்றது.
நிறைவேற்ற இயலாத திட்டமாக இருந்தால் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் எப்படி இடம்பெறும்

கோவை மெட்ரோ திட்டத்திற்கு மறுப்பு தெரிவிக்க மத்திய அரசால் கூறப்பட்ட காரணங்களே உள்ள பல நகரங்களுக்கு மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது கோவைக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

ஏன் கோவைக்கு மெட்ரோ அவசியம்?

✅ இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கோவையின் வளர்ச்சிக்கு

✅ சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நவீன போக்குவரத்து வசதிக்காக

✅ சாலை விபத்துகளை குறைத்து பாதுகாப்பான கோவை உருவாக

✅ அதிக தூரத்தை குறைந்த நேரத்தில் பயணிக்க

✅ ரயில், சாலை, விமான போக்குவரத்தை இணைக்கும் சிறந்த கட்டமைப்பாக
கோவை மெட்ரோ ரயில் திட்டம்

கோவை மக்களின் அடிப்படை தேவையாக உள்ளது.

கோவையை புறக்கணிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக!

கோவை மக்களிடம் இருந்து வரி வசூலித்து, பிற மாநகரங்களின் வளர்ச்சிக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான மெட்ரோ திட்டங்களை வழங்கிவிட்டு, கோவைக்கு மட்டும் அனுமதி மறுப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இந்தியாவில் உள்ள பிற நகரங்களுக்கு ஒரு விதமாகவும், கோவைக்கு மட்டும் வேறு விதமாகவும் விதிகளை பயன்படுத்துவது அப்பட்டமான புறக்கணிப்பு நடவடிக்கையாகும்.

கோவை மெட்ரோ போராட்டத்தின் தொடர்ச்சி

2011 – மத்திய அரசின் அறிவிப்பு

2012 – கோவை மெட்ரோவிற்கான எங்கள் முதல் போராட்டம் தொடக்கம்

15 வருடங்களாக பலமுறை போராட்டங்கள்

2025 – கையெழுத்து இயக்கம்

2026 – அடுத்த கட்டமாக முற்றுகை போராட்டம்

கோவை மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று,
கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்!

வே. ஈஸ்வரன்

தலைவர்

மறுமலர்ச்சி மக்கள் இயக்கம்

(MMI)

📞 99655 40417
27/07/26

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed