filter: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; captureOrientation: 0; hdrForward: 0; shaking: 0.441332; highlight: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask: 8; brp_del_th: 0.0020,0.0000; brp_del_sen: 0.1000,0.0000; delta:1; bokeh:1; ispap:1; papproctime: 2026:02:08 18:06:37; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 3145728;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 251.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 42;zeissColor: bright;

செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணி வண்ணன், அக்கப்போtர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkappore.news / just click now

திருவாரூர் மாவட்டத்தில் 4-ஆவது புத்தகத்திருவிழா பிப்-8-02-2026 முதல் 17-02-2026 வரை நடைபெறுகிற.து. புத்தகக்கண்காட்சி C 51 அரங்குகளில் புத்தகச்சுரங்கம்.. வாங்குங்கள் வாசிப்பை
நேசியுங்கள்..

திருவாரூர் மாவட்டத்தில் 4-ஆவது புத்தகத்திருவிழா பிப்-8-02-2026 முதல் 17-02-2026 வரை நடைபெறுகிறது…புத்தகக்கண்காட்சி 51 அரங்குககளில் புத்தகச்சுரங்கம்.. வாங்குங்கள் வாசிப்பை
நேசியுங்கள்..

செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணி வண்ணன், அக்கப்போtர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkappore.news / just click now


திருவாரூர் வட்டம், இலவங்கார்குடி கிராமம், பவித்திரமாணிக்கம் மெயின்ரோட்டில் அமைந்துள்ள மங்கள்வரதர் திருமண மண்டபத்தில் 4-வது புத்தகத் திருவிழாவை திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி வாரிய கழகத்தலைவர் என்.இளையராஜா ஆகியோர் திறந்து வைத்தார்கள்.

கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஃ திட்ட அலுவலர் செல்வி.பல்லவி வர்மா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யு.கருண்கரட், ஆகியோர் உடனிருந்தனர்.

இன்று 08.02.2026 இப்புத்தகத் திருவிழாவில், “தமிழ்மொழியில் மறுமலர்ச்சி இலக்கியத்தை உருவாக்கியவர்கள்” என்ற தலைப்பில் எழுத்தாளர் இமயம் அவர்களும், “புத்தகங்களே நண்பர்கள்” என்ற தலைப்பில் கவிஞர் தங்கம் மூர்த்தி சிறப்புரையாற்றினார்கள்.

தொடர்ந்து, புத்தக திருவிழாவின் இரண்டாம் நாளான 09.02.2026 அன்று மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை வகிக்க, “வாழ்விலிருந்தே இலக்கியம்” என்ற தலைப்பில் எழுத்தாளர் பவா செல்லதுரை, “அசோகமித்திரன படைப்புகளில் பெண்கள்;” என்ற தலைப்பில் எழுத்தாளர் இராயகிரி சங்கர் , “இலக்கியம் விரும்பு” என்ற தலைப்பில் எழுத்தாளர் துவாரகா சாமிநாதன் சிறப்புரையாற்றுகிறார்கள்.

புத்தக திருவிழாவின் மூன்றாம் நாளான 10.02.2026 அன்று தனி மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை தலைமை வகிக்க, “எழுத்தாளரின் பயணம்” என்ற தலைப்பில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், “தகத்தகாயத் தமிழ்” என்ற தலைப்பில் தமிழியல் ஆய்வாளர், தமிழறிவு சிந்தனை பள்ளி பேரா.முனைவர் இரா.அறிவழகன் , சிறப்புரையாற்றுகிறார்கள்;.

புத்தக திருவிழாவின் நான்;காம் நாளான 11.02.2026 அன்று திருவாரூர் இணைப்பதிவாளர் கூட்டுறவுத்துறை தலைமை வகிக்க, “கற்றது கடுகளவு” என்ற தலைப்பில் புலவர் மா.இராமலிங்கம், “நாளைய உலகம் நமதே” என்ற தலைப்பில் ஆரூர் சீனிவாசன் சிறப்புரையாற்றுகிறார்கள்.

புத்தக திருவிழாவின் ஐந்தாம் நாளான 12.02.2026 அன்று இணை இயக்குநர் வேளாண்மைத்துறை அவர்கள்; தலைமை வகிக்க, “சங்கத்தில் ஆண்டார் தமிழ்” என்ற தலைப்பில் பாவலர் அறிவுமதி தலைமையில், “அங்கதமும் இங்கிதமும்” என்ற தலைப்பில் பேராசிரியர் தெ.வெற்றிச்செல்வன் சிறப்புரையாற்றுகிறார்;

. புத்தக திருவிழாவின் ஆறாம் நாளான 13.02.2026 அன்று இணை இயக்குநர் (சுகாதாரம்) தலைமை வகிக்க, “திராவிடம் படைத்த நவீன தமிழ்நாடு” என்ற தலைப்பில் சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு தலைவர் கவிஞர் மனுஷ்யபுத்திரன், “குழந்தைகளுக்கு தேவையான வெளிகளும் நிலவும் இடைவெளிகளும்” என்ற தலைப்பில் சிறார் எழுத்தாளர் விழியன் அவர்களும், “ஊரும் எழுத்தும்” என்ற தலைப்பில் எழுத்தாளர் சுந்தரபுத்திரன் அவர்களுசிறப்புரையாற்றுகிறார்கள்.

புத்தக திருவிழாவின் ஏழாம் நாளான 14.02.2026 அன்று மேற்பார்வை பொறியாளர், தமிழ்நாடு மின்பகிர்மானக்கழகம தலைமை வகிக்க, “இலக்கியமும் சமூகமும்” என்ற தலைப்பில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா அவர, “நிற்க அதற்குத் தக” என்ற தலைப்பில் அரிமா.தெ.சுதர்சனன், “வானமும் வசப்படும்” என்ற தலைப்பில் செந்தமிழ் அருவி.மரு.கு.கவிதா சிறப்புரையாற்றுகிறாாகள்;.

புத்தக திருவிழாவின் எட்டாம் நாளான 15.02.2026 அன்று திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் தலைமை வகிக்க, “வாசித்தே தான் தீர வேண்டுமா இந்த வாழ்வில்?” என்ற தலைப்பில் கவிஞர்.சாம்ராஜ், “தமிழோடு உறவாடு” என்ற தலைப்பில் எழுத்தாளர் மானா பாஸ்கரன் சிறப்புரையாற்றுகிறார்கள்.

புத்தக திருவிழாவின் ஒன்பதாம் நாளான 16.02.2026 அன்று திருவாரூர் முதன்மை கல்வி அலுவலர் தலைமை வகிக்க, “வாழ்வெனும் வானவில்” என்ற தலைப்பில் பேசும் தென்றல் கவிதா ஜவஹர் “தஞ்சைப் படைப்பாளிகள்” என்ற தலைப்பில் எழுத்தாளர் திரைப்பட இயக்குநர் எஸ்.ராஜகுமாரன் சிறப்புரையாற்றுகிறார்கள்.

புத்தக திருவிழாவின் நிறைவு நாளில் 17.02.2026 அன்று முதுநிலை மண்டல மேலாளர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் திருவாரூர் தலைமை வகிக்க, “நெஞ்சில் நிறைந்தவை” என்ற தலைப்பில் புலவர் சண்முகவடிவேல், “தையலை உயர்வு செய்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.

மேலும், தினந்தோறும் காலை 10.00 மணி முதல் 4.00 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான போட்டிகள் மற்றும் கலைநிகழச்சிகளும், மாலை 6 மணி முதல் 7 மணி வரை கலைநிகழச்சிகளும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை சிறப்புரைகள், பட்டிமன்றம், சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இப்புத்தக திருவிழாவில் கலெக்டர் தெரிவித்ததாவது..
பெரிய தலைவர்கள் புத்தகங்களை வாசிப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். புத்தகங்களை வாசிப்பவர்களாக மட்டுமில்லாமல், நேசிப்பவர்களாகவும் கூட இருந்திருக்கிறார்கள்.

இன்றைய வாசிப்பாளர்கள் நாளைய தலைவர்கள் என்ற கூற்றுக்கிணங்க இன்றைய இளைய தலைமுறைகளை வாசிப்பாளராக மாற்ற, நாளைய தலைவராக மாற்ற தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தக திருவிழா நடத்த வேண்டுமென்று ஆணையிட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டத்தில் நான்காவது முறையாக இன்று முதல் பிப்ரவரி-17ம் தேதி வரை புத்தக திருவிழா நடைபெறவுள்ளது.

முன்பெல்லாம் புத்தக கண்காட்சி என்பது சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே நடைபெறும். புத்தகங்கள் வாங்க வெளியூர் செல்ல வேண்டிய நிலையை மாற்றி இப்பொழுது நமது மாவட்டத்திலேயே புத்தகங்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வாசிக்கும் பழக்கத்தை மட்டும் உருவாக்கி கொண்டால் போதும். அதற்காகத்தான் இந்த புத்தக திருவிழா நடைபெறுகிறது. வாசிக்கும் பழக்கம் நம்மிடையே வந்துவிட்டால் அது நமது வாழ்க்கை முழுவதும் தோழானாகவே இருந்து கொண்டிருக்கும். இன்றைய உலகம் போட்டி நிறைந்த உலகமாக உள்ளது.

இந்த போட்டி நிறைந்த உலகத்தில் நம்மை உயர்த்தி காட்டுவது நமது அறிவு மட்டும்தான். அந்த அறிவை வாசிப்பு திறானால் மட்டுமே மேம்படுத்த முடியும். பேசுவதற்கு முன்பு யோசிக்க வேண்டும். யோசிப்பதற்கு முன்பு வாசிக்க வேண்டும். இங்கு வந்திருக்கின்ற பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு நிறைய புத்தகங்களை வாங்கி கொடுக்க வேண்டும்.

பெற்றோர்கள் நமது குழந்தைகளுக்கு புத்தகங்களை வாங்கி கொடுத்து வாசிக்கும் திறனை மேம்படுத்த வேண்டும். பேரறிஞர் அண்ணா கூறுவதுபோல நூலகம் இல்லா வீடு முழுமை அடையாது. அதுபோல் புத்தகங்களை வாங்குவோம், வாசிப்போம்,

நமது வாழ்க்கையை முழுமையடைய செய்வோம் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்தின் , தெரிவித்தார்.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் பா.கலைவாணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சதீஸ், திருவாரூர் வருவாய் கோட்டாச்சியர் சத்யா, திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில், திருவாரூர் நகர்மன்ற துணைத்தலைவரஅகிலா சந்திரசேகர்; திருவாரூர் நகரமன்ற உறுப்பினர் பிரகாஷ், உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், புத்தக வாசகர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி ஆசிரியர், மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணி வண்ணன், அக்கப்போtர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkappore.news / just click now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

error

Enjoy this blog? Please spread the word :)