N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ் Akkappore.news
/ Just CliCK now

சோழவந்தான் பகுதியில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை …

N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ் Akkappore.news
/ Just CliCK now

சோழவந்தான் பிப்ரவரி 15

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார ஊராட்சி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாகவும் பிரச்சனைக்குரிய வகையில் கடைகளையும் வழிபாட்டுத் தலங்களையும் மறைத்து பிளக்ஸ் பேனர் கட்டுவதால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர் இது குறித்து சமூக வலைதளங்கள் மூலமும் சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருக்கு வாய்மொழியாகவும் மனுவாகவும் ஏற்கனவே நிறைய மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடி பார்வையிட்டு சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அனைத்து பிளக்ஸ் பேனரை அவிழ்க்க வேண்டும் அனுமதியின்றி புதியதாக பிளக்ஸ் பேனர்களை வைப்பதற்கு உரிய கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை வகுக்க வேண்டும்
மேலும் இது குறித்து அரசுத்துறை அதிகாரிகளுக்கு முறையான சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் சமீப காலங்களில் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளையும் செய்த சாதனைகளையும் பிளக்ஸ் பேனராக சில இடங்களில் வைத்துள்ளனர அதில் அரசியல் கட்சியினரிடையே மோதல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது எனவே பிளக்ஸ் பேனர் கட்டுவதில் எதிர்ப்பு தெரிவித்தால் அந்த இடத்தில் பிளக்ஸ் கட்ட அனுமதி வழங்கக் கூடாது பேரூராட்சி நிர்வாகம் ஊராட்சி நிர்வாகம் உள்ளிட்ட அரசுத்துறை நிர்வாக அதிகாரிகள் இந்த விஷயத்தில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மேலும் காவல்துறையினர் பொதுமக்கள் பிளக்ஸ் பேனர் தொடர்பாக கொடுக்கும் மனுக்களுக்கு உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் தேர்தல் காலங்களில் பெரிய அளவில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் சட்டம் ஒழுங்கு சீர்கெடவும் வாய்ப்பு உள்ளது மேலும் பிளக்ஸ் வைப்பதில் போதை நபர்கள் அட்டூழியத்துடன் நடந்து கொள்கின்றனர் இது குறித்து பிளக்ஸ் கட்டுவோர் அதாவது கொட்டகை போடுவோர் பிளக்ஸ் டிசைன் செய்து பிரிண்ட் அடிப்பவர்கள் சமூக ஆர்வலர்கள் பத்திரிகையாளர்கள் பொதுமக்கள் ஆகிய நபர்களை மாதம் ஒருமுறை அழைத்து கூட்டம் நடத்தி உரிய அறிவுரைகளை வழங்க
வேண்டும் திருமண மண்டபங்களில் திருமணத்தின் போது அல்லது விசேஷத்தின் போது சம்பந்தப்பட்ட திருமண மஹாலில் ஒரு பேனர் மட்டும் வைக்க அனுமதி வழங்க வேண்டும் மகாலின் எதிர் புறமோ அல்லது பக்கவாட்டிலோ வைக்க அனுமதி வழங்கக்கூடாது மேலும் சாதிய தலைவர்கள் அல்லது மற்ற நபர்களை துன்புறுத்தும் வசனங்கள் இடம் பெறக் கூடாது என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வுகளை சம்பந்தப்பட்ட காவல்துறை உளவுப் பிரிவில் உள்ள அதிகாரிகள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் ராட்சத பேனர்கள் வைக்க எக்காரணம் கொண்டும் அனுமதி வழங்கக்கூடாது அதிகபட்சமாக அனுபவிக்கப்பட்டுள்ள அளவில் பிளக்ஸ் பேனர்கள் வைக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் இதனால் மிகப்பெரிய அசம்பாவிதங்கள் தவிர்க்கப்படும் மேலும் பிரச்சனைகள் ஏற்படா வண்ணம் சுமூகமாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீப காலங்களாக பிளக்ஸ் பேனர் வைப்பதில் கிராமப் பகுதிகளில் அதிகளவு பிரச்சனை ஏற்பட்டு வருகிறது அரசியல் கட்சிக்கும் தனி நபர்களுக்கும் இதனால் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது எனவே ப்ளெக்ஸ் கட்டுவதை முறைப்படுத்த வேண்டும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கட்ட அனுமதி வழங்க வேண்டும் யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் அந்த இடங்களில் முறையாக அனுமதி பெற்றுள்ளார்களா என கேட்டு வைக்க அனுமதிக்க வேண்டும் அனுமதி பெறாத பட்சத்தில் பேனர்கள் வைக்க அனுமதிக்க கூடாது குறிப்பாக பெண்கள் பள்ளி மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்ற பகுதிகளை முக்கியமான இடங்களாக கருதி வந்த இடங்களில் பேனர்கள் வைக்க அனுமதி வழங்கக் கூடாது இது குறித்து தமிழ்நாடு அரசு விரிவான ஒரு ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று சோழவந்தான் பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் தெரிவித்துள்ளனர்
தேர்தல் நெருங்கும் சமயத்தில் பிளக்ஸ் பேனர்களால் மிகப்பெரிய அளவில் சட்டம் ஒழுங்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர் ஆகையால் மதுரை மாவட்ட நிர்வாகம் மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் அனுமதி இன்றி வைக்கப்படும் பேனர்களை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ் Akkappore.news
/ Just CliCK now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

error

Enjoy this blog? Please spread the word :)