தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி உட்பட 9 ஆளுநர்களை அதிரடி மாற்றம் செய்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு…!!

தமிழ்நாடு ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்காளத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கேரள மாநில ஆளுநராக உள்ள ராஜேந்திர விஷ்வநாத் ஆர்லேகர், தமிழ்நாடு ஆளுநரின் பொறுப்புகளை கூடுதலாக மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி உட்பட 9 ஆளுநர்களை மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு:

ஹிமாச்சலப் பிரதேச ஆளுநர் சிவ் பிரதாப் சுக்லா தெலுங்கானா ஆளுநராக நியமனம்.

தெலுங்கானா ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமனம்.

நந்த் கிஷோர் யாதவ் நாகாலாந்து மாநில ஆளுநராக நியமனம்.

சையத் அடா ஹஸ்னைன் பீகார் மாநில ஆளுநராக நியமனம்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி மேற்குவங்க ஆளுநராக நியமனம்.

கேரள மாநில ஆளுநராக உள்ள ராஜேந்திர விஷ்வநாத் ஆர்லேகர், தமிழ்நாடு ஆளுநரின் பொறுப்புகளை கூடுதலாக மேற்கொள்வார்.

ஹவிந்தர் குப்தா ஹிமாச்சல் பிரதேச ஆளுநராக நியமனம்.

வினய் குமார் சக்சேனா லடாக் துணை நிலை ஆளுநராக நியமனம்.

தரன்ஜித் சிங் சந்து டெல்லி துணைநிலை ஆளுநராக நியமனம்.

இவருக்கு பதில் இவர்!

மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அவருக்கு பதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நியமித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பேனர்ஜி பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி மேற்கு வங்க ஆளுநராக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

கேரளம் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் தமிழ்நாடு ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed