டைம்ஸ் ஆஃப் இந்தியா மார்வாடிகளின் பின்னணி உடையது

📓📒📙📘📗📕📔📗

15 – 03 – 2026

விருதுகள் வழங்கப்படுகிறதா ? வாங்கப்படுகிறதா ? தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் கேள்வி !

📗

அகிலன், ஜெயகாந்தன் ஆகியோருக்கு பிறகு தற்போது, கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஞானபீடம் விருது கிடைத்துள்ளது !

முதலில் அதற்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள் !

📕

டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தைச் சேர்ந்தவர்களால் வழங்கப்படும் ஞானபீடம் விருது...!!

டைம்ஸ் ஆஃப் இந்தியா மார்வாடிகளின் பின்னணி உடையது.

சமஸ்கிருதம், இந்துத்வா, இந்தியப் பெருந்தேசியம், இந்தி, நலன்களில் அக்கறை கொண்டது.

இதனுடைய தாக்கம் ஞானபீட விருதிலும் காணப்படும்.

ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர எழுதியதற்காக முன்பு இவ்விருதை எழுத்தாளர் ஜெயகாந்தன் பெற்றார்.

பொதுவாக இவ்விருது இலக்கிய மதிப்பை கணக்கில் கொள்வதில்லை.

2024 இல், இவ்விருது ராம்பத்ராச்சாரியார் என்கிற ஆர்எஸ்எஸ் சாமியாருக்கு வழங்கப்பட்டது.

இவர் இலக்கியவாதியாக அறியப்பட்டவர் அல்லர். முஸ்லிம் எதிர்ப்பு மற்றும் தலித் எதிர்ப்பு அறிக்கைகளால்பிரபலமானவர்.

பாபர் மசூதியை இடித்து, ராமர் கோயில் கட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தவர்.

இவரோடு பிரபல இந்தி திரைப்படப் பாடலாசிரியர் குல்சாருக்கு வழங்கப்பட்டது.

குல்சார் நல்ல மனிதர். திறமையான திரைப்பட தயாரிப்பாளர் .பிரபலமான பாடலாசிரியர் . என்றாலும், இலக்கியத்தில் அவரை விட ஆழமான படைப்பாளிகள் உள்ளனர். குல்சார் பாடல்கள் பெரும்பாலும் காதலை மையமாகக் கொண்டவை. சமூகம் மற்றும் அரசியலின் தீமைகள் குறித்த அக்கறையற்றவை.

வைரமுத்துவின் இலக்கிய இயக்கமும் இத்தகையதுதான்.
பாடலாசிரியர்கள், மேடைக் கவிஞர்கள், மத போதகர்கள் போன்றோருக்கான விருதாக ஞானபீடம் மதிப்பிழந்திருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு தருண் விஜய் என்கிற பாஜக எம்பிக்கு (தமிழ் தொண்டுக்காக) வைரமுத்து பாராட்டு விழா எடுத்தது பலருக்கு ஞாபகம் இருக்கலாம்.

உண்மையில் தருண் விஜய் ஒரு சமஸ்கிருத வெறியர். எம்.பி ஆகும்போது சமஸ்கிருதத்தில் உறுதி மொழி எடுத்தவர்.

அதுமட்டுமில்லை. தருண்விஜய் இப்போதும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவர். தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவாக TOI வில் எழுதிவருபவர்.

கூட்டிக்கழித்துப் பாருங்கள்.

இப்போதெல்லாம் விருதுகள் வழங்கப்படுவதில்லை.
வாங்கப்படுகின்றன...!!

தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் !
9444111494

7401117799

📗📕📘📔📙📒📓📕

கி. அருண்குமார்
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்
சென்னை
செய்தி தொடர்பாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed