சென்னை- போடி செல்லும் ரயிலுக்கு மாலை அணிவித்து மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி உசிலம்பட்டி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்த பாஜகவினர்…!! மதுரை மாவட்ட தலைமை செய்தியாசிரியர் N. ரவிச்சந்திரன் akkappore.news சொடுக்குங்க

உசிலம்பட்டி: சென்னை – போடி செல்லும் பயணிகள் ரயில் வாரத்தில் வராது நல்ல திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் சென்று வந்த நிலையில்,
இன்று முதல் சென்னை- போடி ரயில் வாரத்தில் திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய 6 ஆறு நாட்கள் விரிவுபடுத்
தப்பட்ட சூழலில், சென்னையில் இருந்து ஒரு ரயிலும் போடியில் இருந்து ஒரு ரயிலும் ஒவ்வொரு நாளும் சென்னை,காட்பாடி, சேலம்,நாமக்கல், கரூர்,திண்டுக்கல், மதுரை, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி,தேனி, போடிநாயக்கனூர் வழியாக சென்றடைகிறது.
இந்நிலையில்,
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி ரயில் நிலையத்தில் சென்னை போடி ரயில் வந்தடைந்தது.,
இதனை பாஜக மாநில செயலாளர் கதலி நரசிங்கப் பெருமாள் தலைமையில் பாஜக நிர்வாகிகள் ரயில் என்ஜினுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மோடிக்கு நன்றி தெரிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் ரயில் நேர கால அட்டவணைகளை வழங்கி உற்சாகமாக வரவேற்றனர்.
தொடர்ந்து,
ரயில் எஞ்சின் ஓட்டுனர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாஜக நிர்வாகிகள் வழி அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed