மக்களுடன் மரிய ஜெனிபர் : ஆரல்வாய் மொழி பேரூராட்சி பூங்காவில் குமரி முனையில் “நாம் தமிழர்” பொதுக்கூட்டம்…!!

நேற்று மாலை ஆரல்வாய்மொழி பேரூராட்சி பூங்காவில் நடைபெற்ற #குமரிமுனையில்_நாம்தமிழர் பொதுக்கூட்ட நிகழ்வில்
நாம் தமிழர் உறவுகளும் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியின் பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்து நமக்கு வலு சேர்த்தனர்.


தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற முதல் பொதுக் கூட்டத்தில் பேரெழுச்சியுடன் கலந்துகொண்டு நிகழ்வை வெற்றிகரமாக்கிய அனைத்து சொந்தங்களுக்கும் நன்றிகள். ..

மக்களின் வெகுவான ஆதரவும் ஈடுபாடும் தேர்தல் களத்தில் மக்களை மட்டுமே நம்பி நிற்கும் எங்களுக்கு பெரும் நம்பிக்கையை தந்திருக்கிறது. வாக்கரசியலில் வெற்று விளம்பரங்களையும், போலி வாக்குறுதிகளையும், பணபலத்தையும் நம்பி தேர்தலை அணுகும் திராவிட தேசிய கட்சிகள் மத்தியில் தேர்தல் அரசியலும் மக்கள் அரசியலே, தேர்தல் களமும் எங்களுக்கு போராட்டக்களமே என்ற எங்கள் உறுதியான நம்பிக்கையை மெய்ப்பித்த அனைவருக்கும் நன்றிகள்.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி
யின் மக்களுக்கான அரசியலை எம்மக்கள் அங்கீகரிப்பார்கள் என்ற பெரும் நம்பிக்கையுடன் தொடர்ந்து பயணிக்கிறோம்.


சிறப்புரையாற்றிய சகோதரர்கள் துரைமுருகன் & ஹுமாயூன் உட்பட மேடையை புரட்சிகர களமாக்கிய அனைத்து பேச்சாளர்களுக்கும் நன்றிகள்.
நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த பொறுப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

கன்னியாகுமரி நாதக வேட்பாளர் மரிய ஜெனிபர்

வாழ்த்துகளுடன்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed