சாத்தான்குளம் ஜெயராஜ், பெனிக்ஸ் போலீஸ் இரட்டை படுகொலை வழக்கில் நீதி பெற்று தந்த தேவதை நர்ஸ் வனஜா கர்ணன்…!! வாழ்த்துகிறது …அக்கப்போர் நாளிதழ் akkappore.newa சொடுக்குங்க

சாத்தான்குளம் தந்தை -மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் காவல் நிலைய படுகொலையை பிரேத பரிசோதனை அறிக்கையில் (கொரோனா வைரஸ் காரணமாக இறந்தனர் என்று மாற்றி அமைக்க போலீஸ் முதலில் திட்டமிட்டது.

ஆரம்பத்தில் வழக்கை இப்படி ஜோடித்து முடித்து வைக்க சதி திட்டம் தீட்டிய போது அதனை அறிந்து மருத்துவமனை செவிலியர் ஆன வனஜா கர்ணன் பொதுவெளிக்கு கொண்டு வந்து தைரியமாக அம்பலப்படுத்தினார்.

இன்றைக்கு உண்மை குற்றவாளிகளுக்கு இரண்டை மரண தண்டனை கிடைக்க காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் வனஜா கர்ணன்.

தென் தமிழகத்தில் அனாகரிய சாதி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்ட களத்தில் தன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரன் பொட்டல்காடு கர்ணன் அவர்களின் துணைவியாரான இவர், தன் கணவரின் போராட்ட குணத்தை இன்றும் தன் செயல்கள் மூலம் நிலைநாட்டி வருகிறார்.

எதற்கும் அஞ்சாமல், நீதிக்காக சமரசமின்றிப் போராடும் வனஜா கர்ணன், தற்போது எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களின் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் பயணித்து வருகிறார்.

சமரசமற்றப் போராளி வனஜா கர்ணனுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள்!

வாழ்த்தும்…அக்கப்போர் நாளிதழ், செய்திப்பிரிவு

(முக நூல் பதிவில் இருந்து..)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed