விஜய்க்கு பெரிய ஷாக்.. ..!! எடப்பாடி பழனிச்சாமி தொகுதியில் தவெக வேட்பாளர் மாயம்….!! வேட்பு மனுவும் நிராகரிப்பு…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

விஜய்க்கு பெரிய ஷாக்.. ..!!,எடப்பாடி பழனிச்சாமி தொகுதியில் தவெக வேட்பாளர் மாயம்….!! வேட்பு மனுவும் நிராகரிப்பு…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

எடப்பாடி தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் அருண் குமாரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தவெக வேட்பாளர் அருண் குமார் மாயமானதாக கூறப்பட்ட நிலையில் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுவை முன்மொழிந்தவர்களை உறுதிப்படுத்த முடியாததால் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தவெக வேட்பாளருக்கு மாற்றாக நிறுத்தப்பட்டு இருந்தவரின் வேட்பு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

திருத்தம் செய்ய வேண்டிய ஆவணங்களை கொண்டு வருவதாக கூறி அருண்குமார் சென்றதாகவும், ஆனால் அவர் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை என்பதால் அவர் மாயமாகிவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறியிருந்தனர். இதுவரை அருண்குமார் வரவில்லை என்பதால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

தவெக வேட்பாளர் வேட்புமனு நிராகரிப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் அவகாசம் நேற்றுடன் முடிவு பெற்ற நிலையில், இன்று வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை நடைபெற்றது. காலை முதலே வேட்பு மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைப்பு, வேட்பு மனு ஏற்பு என பரபரப்புக்கு பஞ்சம் இன்றி தமிழக அரசியல் களம் சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் அருண்குமாரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. வேட்பாளருக்கு முன்மொழிந்த நபர்களை உறுதி செய்ய முடியாத காரணத்தால் அவரது மனு நிராகரிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. முன்னதாக தவெக வேட்பாளர் அருண்குமார் மாயமாகிவிட்டதாகவும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தவெக நிர்வாகிகள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

எடப்பாடி தொகுதியில் தவெக போட்டியில்லை
மாற்று வேட்பாளரின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளதால், எடப்பாடி தொகுதியில் தவெக போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் எடப்பாடி தொகுதியில் அதிமுக – திமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி 8-வது முறையாக போட்டியிட உள்ளார்.

தமிழகத்தின் மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்றாக உள்ள எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top