ஐசியூவில் இருந்து கோவை வடக்கு தொகுதி பாஜக. வேட்பாளர் வானதி சீனிவாசன் வீடியோ.. !! லிங்க் – அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

கழுத்தில் பாஜக துண்டுடன் வாக்கு சேகரிப்பது யார்னு பாருங்களேன்!

கோவை வடக்கு தொகுதியின் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மகன் ஆதர்ஷ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏவும் மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் வரும் சட்டசபைத் தேர்தலில் வானதி சீனிவாசனுக்கு கோவை வடக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அவர் தொகுதி மாறுவது குறித்து நிறைய பேச்சுக்கள் அடிப்பட்டன. அந்தச வகையில் அவர் தொகுதி மாறி, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அவரை ஆதரித்து அண்ணாமலை உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர்.

இந்த நிலையில் வானதிக்கு திடீரென வலது காலில் ஏற்பட்ட லேசான தொற்றால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு 48 மணி நேரம் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தினர்.

இதனால் அவரது தேர்தல் பிரச்சார நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன. இவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானதி சீனிவாசன் நேற்று மதியம் 2:50 மணிக்கு வலது காலில் ஏற்பட்ட லேசான தொற்று காரணமாக கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் மற்றும் பிற ஆதரவு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, இரண்டு நாட்கள் படுக்கை ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்தபோது, அவர் எடுத்த மருந்துகளில் ஒன்றிற்கு லேசான அலர்ஜி எதிர்வினை ஏற்பட்டது.

இதன் காரணமாக நேற்று முன் தினம் இரவு 8 மணிக்கு கண்காணிப்புக்காக ஐசியு (ICU) பிரிவிற்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் உணர்வுடன் இருந்து, பேசக்கூடிய நிலையில் மிகவும் நலமாக உள்ளார்.

முழுமையான குணமடைய குறைந்தது மேலும் 3 முதல் 4 நாட்கள் சிகிச்சை தேவைப்படும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் கோவை வடக்கு தொகுதியில் கழுத்தில் பாஜக துண்டு அணிந்து கொண்டு அவரது மகன் ஆதர்ஷ் வாக்கு சேகரித்து வருகிறார்.

அந்த தொகுதியில் வாக்கு சேகரிக்கும் அவரை பாஜக மூத்த தலைவர்கள் மக்களிடம் வானதியின் மகன் என அறிமுகப்படுத்தினர். இதை வைத்து அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed