ஏடிஎம் இயந்திரத்தில் எடுக்கப்படாத பணம்
காவல்நிலையத்தில் ஒப்படைத்த தொழிலாளி…!! K.சாமி, நாமக்கல் மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், Akkappore.news / just CLICK now

ஏடிஎம்மில் எடுக்கப்படாமல் இருந்த பணத்தை சரவணன் குமாரபாளையம் காவல் உதவி ஆய்வாளர் மாதேஸ்வரனிடம் ஒப்படைத்தார் .

ஏடிஎம் இயந்திரத்தில் எடுக்கப்படாமல் இருந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த விசைத்தறி தொழிலாளிக்கு சமூக வலைதளத்தில் பாராட்டு குவிகிறது .

குமாரபாளையம் காவேரி நகரை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி சரவணன் . இவர் கடந்த 11 ம் தேதி பள்ளிபாளையம் பிரிவு ரோட்டில் உள்ள ஸ்டேட் பேங்க் ஏடிஎம்முக்கு பணம் எடுக்கச் சென்றார்.

கார்டை இயந்திரத்தில் செருகும் முன்பே இயந்திரத்தில் பணம் எடுக்கும் இடத்தில் ரூபாய் நோட்டுக்கள் எடுக்கப்படாமல் இருந்து.

சரவணனுக்கு முன்பாக பணம் எடுக்க வந்த நபர் இந்த பணத்தை எடுக்காமல் விட்டுச் சென்றிருக்கலாம் என கருதிய சரவணன், எடுக்கப்படாமல் இருந்த பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்தார்.

அதில் 3 ஆயிரம் ரூபாய் இருந்தது . இதையடுத்து பணத்துடன் குமாரபாளையம் காவல் நிலையம் சென்ற சரவணன், ஏடிஎம்மில் எடுக்கப்படாமல் இருந்த பணத்தை எஸ்ஐ மாதேஸ்வரனிடம் ஒப்படைத்தார் . இவரது செயல் குறித்த தகவல் சமூக இணையதளத்தில் வைரலானது.

இதை கவனித்த சமூக ஆர்வலர்கள் பலரும் சரவணன் செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர் .

K.சாமி, நாமக்கல் மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், Akkappore.news / just CLICK now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed