ஜாதகத்தின் உயிர் நாடி லக்னப் புள்ளியின் பலன்கள்…!! கோவை ஜோதிட கலையரசி M.தனம் B.A., போன் : 90802 73877 ஸ்ரீ தனம் ஜோதிட நிலையம். அக்கப்போர் நாளிதழ் ஜோதிடம் அறிவோம் தொடர் – 4* akkappore.news
சொடுக்குங்க

ஜோதிடத்தில் லக்னம் அல்லது லக்னப்புள்ளி என்பது ஒரு ஜாதகத்தில் உயிர்நாடியாகவே கருதப்படுகிறது

ஒரு குழந்தை பிறக்கும் தருணத்தில் கிழக்கு திசையில் வானத்தில் எந்த ராசி உதயமகிற நேரம் அதுவே அந்த நபரின் லக்னம் ஆகும்.

லக்னம் என்பது பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திலும் 12 ராசிகளும் கிழக்கு அடிவானத்தில் தோன்றி மறையும் சூரியன் ஒரு ராசியில் ஒரு மாதம் தங்கும் சந்திரன் ஒரு ராசியில் 2 1/2 நாள் தங்கும் லக்னம் ஒரு ராசியில் சுமார் 2 மணி நேரம் மட்டுமே இருக்கும்.

எனவே ஒரு நாளில் குழந்தைகள் பிறந்தாலும் லக்னம் மாறுபடுவதால் தான் ஒவ்வொருவரின் குணாதிசயங்களும் மாறுகின்றது.

வாழ்க்கையும் வேறு வேறு கோணங்களில் இருக்கிறது. ஜாதகத்தில் லக்னமும் லக்ன ப்புள்ளி முக்கியத்துவம் வாய்ந்தவை. ஜாதக கட்டத்தில் லக்னம் என்பது முதல் வீடு ஒன்றாம் பாவமாகும். இதைக் கொண்டுதான் மற்ற 11 வீடுகளும் கணக்கிடப்படுகின்றன.

. ராசி மண்டலம் மொத்தம் 360 பாகை கொண்டது இதில் 12 ராசிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ராசிக்கும் 30 பாதை என ஒதுக்கப்பட்டுள்ளது.

லக்னப்புள்ளி என்பது நீங்கள் பிறந்த துல்லியமான பாகை கலை விகலை ஆகியவற்றை குறிக்கும் உதாரணத்துக்கு மேஷ ராசியில் 15 பாகையில் லக்னம் விழுந்தால் அதுவே உங்கள் லக்னப்புள்ளி இந்த புள்ளி எந்த நட்சத்திர பாதத்தில் விழுகிறதோ அந்த நட்சத்திரத்தின் அதிபதியே உங்கள் லக்ன நட்சத்திர அதிபதி ஆவார்.

லக்னம் மற்றும் லக்னப்புள்ளி ஒருவரின் குணம், புத்திசாலித்தனம், செயல், வேகம் ,மற்றும் கௌரவம், ஆகியவற்றை லக்னம் உணர்த்தும். ஜாதகத்தில் லக்னம் எப்பொழுதும் சிறப்பாக இருக்க வேண்டும் லக்ன புள்ளியும் இருக்கும் நட்சத்திரத்தின் கிரகம் பலமாக இருக்க வேண்டும்..

அப்பொழுதுதான் ஜாதகர் முழுமையான பலனை அனுபவிக்க முடியும். லக்னப்புள்ளி சூரியனின் நட்சத்திரங்களான கிருத்திகை உத்திரம் உத்திராடம் இந்த நட்சத்திரத்தில் லக்னப்புள்ளி இருந்தால் இவர்களுக்கு சூரியனுடைய ஆத்ம பலம் கிடைக்கும். ஜாதகருக்கு அதிகாரம் தன்னம்பிக்கை கௌரவம் இவை வாழ்க்கையின் மையமாகக் கொண்டு வாழக்கூடியவர்களாக இருப்பார்கள்.

சுயமரியாதை மிகுந்தவர்கள் தலைமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

யாருக்கும் கட்டுப்பட்டு வாழ விரும்ப மாட்டார்கள்.

சுதந்திரவாதிகளாகவே செயல்படுவார்கள். தங்கள் கருத்துக்களை தெளிவாக வெளிப்படுத்துவார்கள்.

இவர்கள் முகத்தில் ஒரு விதமான தேஜஸ் ஒரு ஒளிவட்டம் எப்போதும் இருக்கும்.

அதிகாரத் தோரணையும் இருக்கும் மற்றவர்களை ஈர்க்கும். காந்த சக்தி கொண்டிருப்பதால் எளிதில் எல்லோருடைய பழகும் தன்மையும் இவர்களுக்கு உண்டு.

. நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். நேர்மையாகவும் எதையும் ஒளிவு மறைவின்றி பேசுவார்கள். சில நேரங்களில் தனது முடிவில் மிகவும் உறுதியாக பிடிவாதமாக இருப்பார்கள.

தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகம் இருக்கும். அரசு துறைகளில் நிர்வாக பொறுப்புகளில் நல்ல வாய்ப்புகள் அமையும். சமூகத்தில் ஒரு தனி அந்தஸ்து அல்லது கௌரவமான பதவிகள் இவர்களைத் தேடி வரும் எந்த ஒரு கூட்டத்திலும் இவர்கள் தனித்துவத்துடன் இருப்பார்கள்.

இவர்களுடன் எப்பொழுதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் அரசியலில் இருந்தால் இவர்கள் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் அனைவரையும் வைத்துக்கொண்டு தான் பயணம் செய்யக்கூடிய அனைத்து விஷயங்களையும் சரியான முடிவினை எடுத்து செயல்படுவார்கள்.

அரசு அதிகாரிகளாக இருந்தாலும் நல்ல நிர்வாக திறமையும் கண்டிப்பும் இருக்கும். லக்னாதிபதி லக்கண புள்ளி நின்ற கிரகம் 6 8 12 இந்த பாவங்களில் மறையாமல் கேந்திர ஸ்தானங்கள் அல்லது திரிகோண ஸ்தானங்களில் இருப்பது. ஆட்சி, உச்சம் ,திக்பலம், பெறுவது ஜாதகருக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.சூரியன் எப்படி ஒளி பொருந்திய கிரகமாக அனைவருக்கும் தெரியும்படி இருக்கிறதோ அதுபோல் இவர்களும் இவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அனைவருக்கும் தெரியும்படியுமாக இருக்கும்.

லக்னப்புள்ளி சூரியனின் சாரத்தில் அமையும் பொழுது உடலில் உஷ்ணம் சற்று அதிகமாக இருக்கும் இவர்கள் உடல் சூட்டை தணிக்கும் உணவு பொருட்களை எடுத்துக் கொள்வது நல்லது.

இவர்கள் சூரியனின் சிறப்பான பலன்களை முழுமையாக அடைய இவர்கள் சூரியனுக்கு அதி தேவதையான சிவபெருமான் எனவே இவர்கள் ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வதும் சிவபுராணம் வாசிப்பதும் இவர்களுக்கு மன உறுதியையும் உடல் ஆரோக்கியத்தையும் தரும் சூரியன் தந்தையை குறிப்பவர் எனவே உங்கள் தந்தையோ அல்லது தந்தை வழி முன்னோர்களையோ மதித்து நடப்பது உதவிகள் செய்வது ஆசிர்வாதம் வாங்குவது உங்களுடைய லக்னப் புள்ளியில் வலுப்படுத்தும்.

இவர்கள் நேரடியாக சூரிய பகவானை வழிபாடு செய்வது இவர்களுக்கு ஒரு அபரிவிதமான பலன்களைத் தரும் தினமும் காலையில் சூரிய உதயத்தின் போது சூரியன் நமஸ்காரம் செய்வது உடல் மற்றும் ஆன்ம பலத்தை அதிகரிக்கும். ஞாயிற்றுக்கிழமையில் ஏழைகளுக்கு கோதுமையால் செய்யப்பட்ட பாயசம் மற்றும் உணவு பொருள்களை தானமாக கொடுக்கலாம்.

கோதுமை மாவில் தீபம் போட்டு வழிபாடு செய்து உங்கள் வேண்டுதலை வைக்கலாம்.

நீங்கள் வழிபாடு செய்யும்போது ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்வது எதிர்ப்புகளை எல்லாம் வெல்ல உதவும்.

  • கோவை ஜோதிட கலையரசி M.தனம் B.A., போன் : 90802 73877 ஸ்ரீ தனம் ஜோதிட நிலையம்.

செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ் ஜோதிடம் அறிவோம் பகுதி,

akkappore.news
சொடுக்குங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed