
உங்கள் குழந்தைகளுக்கு இருக்கும் கல்வி, தொழில் திறமை என்ன ? ஜாதக ரீதியாக சில கிரகங்களின் பலத்தை வைத்து நாம் முடிவு செய்வது எப்படி? கோவை ஜோதிட கலையரசி M.தனம் B.A., போன் : 90802 73877 ஸ்ரீ தனம் ஜோதிட நிலையம். அக்கப்போர் நாளிதழ் ஜோதிடம் அறிவோம் – தொடர் – 3 akkappore.news சொடுக்குங்க

மனித வாழ்க்கையில் கல்வி என்பது ஒரு அடிப்படை தூண். அது சரியாக இருந்தால் தான் அவனுடைய வாழ்க்கையை எல்லா விதமான பொருளாதாரம் முன்னேற்றங்களும் பதவிகளும் புகழ்கள் அவனுடைய வாழ்வாதாரம் இதையெல்லாம் மேம்படுத்துவதற்கு இந்த கல்வி தான் மிக முக்கியமாக இருக்கிறது.
ஆனால் எந்த கல்வியை தேர்வு செய்வது என்பது முக்கியமான முடிவு சரியான கல்வித் தேர்வு அவரை எளிதில் வெற்றி அடையச் செய்யும்.
ஒவ்வொருவருக்கும் தனித்திறமை விருப்பம் வாழ்க்கை நோக்கம் ஆகியவை வேறுபடும்.
அதனால் ஒருவருக்கு பொருத்தமான கல்வியை தேர்வு செய்ய வேண்டும் கல்வி அவருடைய வாழ்க்கையை தெளிவான பாதையை உருவாக்கும்.
தொழில் முன்னேற்றத்தையும் உறுதி செய்யும். மன நிறைவை அளிக்கும் ஒருவர் எந்த விஷயத்தில் ஆர்வம் கொண்டுள்ளார் என்பதை முதலில் அறிய வேண்டும்.
ஆர்வமில்லாத தேர்ந்தெடுக்கும் கல்வி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். எல்லோரும் அவர்கள் நினைத்தது போல் படித்து அவர்கள் நினைத்த தொழிலுக்கு செல்கிறார்களா என்று பார்த்தால் இல்லை ஒரு சிலருக்கு படித்தது ஒன்று தொழில் வேற ஆகவே இருக்கிறது.
அந்த தொழிலும் நிறைய தடுமாற்றங்கள் ஏற்ற இறக்கங்கள் எல்லாம் சந்திக்கிறார்கள்.

இன்றைய காலத்தில் படிக்கக்கூடிய பிரிவுகளும் வசதிகளும் அதிகமாகவே இருக்கிறது என்று நம்மால் மறுக்க முடியாத உண்மை.
அதாவது முன்பெல்லாம் பத்தாம் வகுப்பு படிக்கும்போது மதிப்பெண் குறைவாக இருந்தால் அவ்வளவுதான் இனி மேல் படிப்புக்கு செல்ல முடியாது என்ற சூழ்நிலை எல்லாம் இன்று மாறிவிட்டது.
அவரவர் மதிப்பெண்ணுக்கு ஏற்றது போல பல பாடப்பிரிவுகள் உள்ளது.
அதில் அவர்களுடைய தனித்திறமைக்கு ஏற்றாற் போல் துறையைத் தேர்ந்தெடுத்து தொழிற்கல்வியும் படித்து அவர்களால் வெற்றி அடைய முடியும்.
அதனால் எல்லோரும் ஏதோ ஒரு துறை சார்ந்து படிப்பதற்கு உண்டான வாய்ப்புகள் இன்றைய காலகட்டத்தில் நிறையாக உள்ளது.
நீங்கள் விருப்பப்படும் துறைக்கு தகுந்தாற்போல அதற்கான பயிற்சியை பெற்று நீங்கள் சுய தொழில் கூட ஆரம்பிக்கும் அளவுக்கு வாய்ப்புகள் உள்ளது.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் கல்விக்கு எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள் உள்ளதா என்பதை ஆராய வேண்டும்.

இன்றைய காலத்தில் IT , மருத்துவம், வணிகம் போன்ற துறைகளில் அதிக வாய்ப்புகள் தொழில்நுட்பம் வேகமாக வளர்கிறது.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் போன்ற துறைகளில் எதிர்காலத்தில் முக்கியமானவையாக இருக்கிறது.
ஆனால் ஜோதிடத்தில் நாம் எந்த துறையை தேர்வு செய்து படிக்கலாம்.?
நமக்குள் இருக்கும் திறமை என்ன என்பதை பற்றி ஜாதக ரீதியாக சில கிரகங்களின் பலத்தை வைத்து நாம் முடிவு செய்யலாம்.
ஜோதிடத்தில் கல்விக்காக பாவங்கள் இருக்கிறது. காரக கிரகங்களும் இருக்கிறது. அவற்றின் பலன்களை நாம் அறிந்து நாம் துறையை தேர்வு செய்து எடுக்கலாம்.
சரியான துறையை தேர்ந்தெடுப்பதற்கு ஜாதகத்தில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்களை பற்றி பார்ப்போம்.
ஜாதகத்தில் கல்வி மற்றும் அறிவாற்றலை குறிக்கும் பாவங்கள்
இரண்டாம் பாகம் இது ஆரம்பக் கல்வியை குறிக்கும் ஒருவருடைய அடிப்படை அறிவு மற்றும் கற்கும் திறனை இது தீர்மானிக்கிறது.
இந்த பாவத்தில் பாவ கிரகங்கள் என்று சொல்லக்கூடிய ராகு, கேது, சனி, இந்த கிரகங்கள் இருந்தால் இவர் அடிப்படை கல்வி கிடைப்பதற்கு இவர் மிகவும் சிரமப்படுவார்
நான்காம் பாவம் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை குறிக்கும் இது முக்கியமான பாகம் இதுவே இந்த வீட்டின் சுப கிரகங்கள் இருப்பது சீரான கல்வியை தரும்.
இந்த பாவம் பாதிக்கப்பட்டிருந்தால் இவர் பள்ளிப்படிப்போடு முடித்திருப்பார்.
கல்லூரி படிப்பு தொடர்வதற்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கும்
ஐந்தாம் பாவம் இது ஒருவரின் நுண்ணறிவு கற்கும் ஆர்வம் மற்றும் படைப்பாற்றலை குறிக்கும்.
அவருடைய தனி திறமையும் அவருடைய சிந்தனையின் பலத்தையும் குறிக்கக்கூடிய பாவம் இந்த பாவம் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கு தனித்த ஒரு முடிவு எடுப்பதிலும் நிறைய தடுமாற்றங்களை அடைவார்.
இந்த பாவம் சிறப்பாக இருந்தால் மற்றவருக்கு சிறந்த முறையில் அறிவுரை கூறும் அளவுக்கு இவருடைய அறிவுத்திறன் மேலோங்கி இருக்கும்.
ஒன்பதாம் பாவம் இந்த பாவம் ஆராய்ச்சி படிப்புகள்ph.T மற்றும் வெளிநாட்டு படிப்புகளை தீர்மானிப்பது இந்த பாவம் சிறப்பாக இருந்தால் படிப்பில் சிறந்து விளங்கி பாராட்டுகளை பெறுவது படிப்பிற்கான சலுகைகள் எல்லாம் கிடைக்கும்.
பத்தாம் பாவம் படிக்கும் படிப்புக்கு வேலை உதவுமா என்பதை இந்த பாவத்தை வைத்து நாம் கணிக்க வேண்டும்.
ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு குறிப்பிட்ட துறைக்கு அதிபதியாக விளங்குகிறார்கள். அந்த கிரகம் பலமாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு இயற்கையிலேயே அந்த துறைக்கு உண்டான திறமைகள் ஆர்வம் எல்லாம் அவரிடம் இருக்கும்.

ஒவ்வொரு கிரகத்துக்கு உண்டான எந்த துறை என்பதை பற்றி நாம் பார்க்கலாம்.
சூரியன்: அரசியல், மருத்துவம், அரசு நிர்வாகம், தலைமை பண்புகள் சார்ந்த துறைகள், ஐஏஎஸ் ,ஐபிஎஸ், நீதிபதிகள் சட்ட அதிகாரிகள், ராணுவம் ,காவல்துறை ,மின்சாரம்.
சந்திரன்: நர்சிங், உணவு சம்பந்தப்பட்ட துறைகள், அறிவியல் ,மனநலம் மருத்துவர். கடல் சார்ந்த படிப்புகள் ,டிராவல்ஸ் டூரிசம்,
செவ்வாய்: பொறியியல் இன்ஜினியரிங் சீருடை பணியாளர்கள் போலீஸ் ஆர்மி, அறுவை சிகிச்சை மருத்துவர் ,நிலம் தொடர்பான தொழில்கள், ஒர்க்ஷாப் ,சிவில் இன்ஜினியரிங் கன்ஸ்ட்ரக்ஷன், விவசாயம், ரியல் எஸ்டேட்,
புதன்: கணிதம், கணக்கியல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் சயின்ஸ் ,பத்திரிக்கை பிரிவுகள், ஆசிரியர், ஜோதிடம்.
குரு: சட்டம் வங்கி துறை ,ஆசிரியர் ஆன்மீகம் , பணி மேலாண்மை, பேராசிரியர், தத்துவம், பைனான்ஸ் ,லெக்சர்
சுக்கிரன்: கலைத்துறை டிசைனிங், ஆர்க்கிடெக் ஹோட்டல் மேனேஜ்மென்ட், மேலாண்மை, மீடியா ,மியூசிக் ,டான்ஸ் காஸ்டியூம் டிசைனர், ப்யூட்டிஷியன்.
சனி : மெக்கானிக்கல் இன்ஜினியரிங் விவசாயம், புவியியல் ,கடின உழைப்பு சார்ந்த தொழில், ஜர்ஜ், லாயர், போலீஸ் ஜெயில் ,வார்டன், ஆடிட்டர் ,அக்ரிகல்ச்சர் ஸ்கிராப் பிசினஸ், ஃபேக்டரி ஒர்க், சுரங்கத் தொழில்.
ராகு: வெளிநாட்டு படிப்பு ஏஐ கிரைம் செக்யூரிட்டி, பார்மசி ,கெமிக்கல் ,போட்டோகிராபி, ஸ்பை ,டிஜிட்டல் மார்க்கெட்டிங் ,ஐடி ,ஏர்லைன்ஸ், சோசியல் மீடியா ,ரிசர்ச், சினிமா டைரக்ஷன்.
கேது . ரிசர்ச் ஸ்பிரிச்சுவல் ,ஸ்டடிஸ் ,பிசியாலஜி நரம்பியல், இன்டெலிஜென்ஸ் ஸ்டடிஸ் சித்த மருத்துவம், நாட்டு மருத்துவம்,
இதில் நாம் எந்தத் துறையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
நமக்கு எந்த கிரகம் பலமாக இருக்கிறது அதை தொழிலாக செய்யலாம்.
ஐந்தாம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் தொடர்பு கொண்டால் ஒருவர் தான் படித்த படிப்பிலேயே வேலையில் அமருவார்.
சூரியன், புதன் இணைந்து வலுவாக இருந்தால் கல்வியில் சிறந்து விளங்குவார் பாவர்கள் தொடர்பு இன்றி இருக்க வேண்டும்.
நல்ல புத்திசாலி, அறிவு, திறமை இவரிடம் இருக்கும். இந்த கிரகங்கள் பலமாக இருந்தாலும் நமது ஜாதகத்தில் நமது லக்னம் லக்னாதிபதி பலமாக இருக்க வேண்டும் அப்பொழுதுதான் மாணவர்களால் மன உறுதியோடு படிப்பை படித்து முடிக்க முடியும்.
அவர்கள் படிக்கின்ற காலகட்டத்தில் அவர்களுக்கு நடக்கக்கூடிய திசா புத்திகள் அவர்களுக்கு சிறப்பாக அமைய வேண்டும்.
நான்கு ஐந்து அதிபதிகளின் திசைகள் நடந்தால் அவர்கள் கல்வியில் சிறப்பாக அமையும் மாறாக 6 8 12 அதிபதிகளின் தசை நடந்தால் கல்வியில் தடைகள் அல்லது துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
நான்காம் அதிபதியும் லக்னாதிபதியும் 6 8 12 இல் மறைந்தால் அவர்களை விடுதியில் விட்டு படிக்க வைக்கலாம்.
வெளியூர் வெளிநாட்டுப் படிப்புகளுக்கும் அனுப்பலாம். அவர்கள் படித்து முடித்த பிறகு தொழிலுக்கு செல்லும் பொழுது அவர்களுக்கு நடக்கக்கூடிய திசா புத்தியையும் மனதில் வைத்து அவர்கள் துறையை தேர்வு செய்ய வேண்டும்.
மாணவர்களுடைய ஜாதகத்தில் கிரக பலம் பாவ பலம் தசா புத்தி இவற்றை சேர்த்து பார்த்தால் தான் சரியான தீர்மானம் எடுக்க முடியும்.
அதனால் உங்கள் குழந்தைகளின் ஜாதகத்தை பார்த்து நன்கு ஆய்வு செய்தது பிறகு அவர்கள் எந்த துறையை தேர்வு செய்யலாம் என்பதை நீங்கள் முடிவு செய்து உங்கள் குழந்தைகளை வாழ்க்கையில் வெற்றி பெற செய்வது பெற்றோர்களாகிய உங்களின் கடமைகள் ஆகும்.
கோவை ஜோதிட கலையரசி M.தனம் B.A., போன் : 90802 73877 ஸ்ரீ தனம் ஜோதிட நிலையம்

நேரடி ஜோதிட வகுப்பு
தலைப்பு
திசா புத்தி பலன் அறியும் சூட்சமம்
இடம்
ரத்தினம் காம்ப்ளக்ஸ்
சுந்தராபுரம் பஸ் ஸ்டாப்
கோவை
நாள்
21-06-2026
நேரம்
காலை10மணி
முதல் மாலை 5மணி வரை
வகுப்பு ஆசிரியர்
ஜோதிடர்
வடலூர் துரை
தொடர்புக்கு
ஜோதிடர் தனம் கோவை
9080273877
அக்கப்போர் நாளிதழ் akkappore.news செய்திப்பிரிவு,



