மருத்துவ ஜோதிடம்…!!
கோவை ஜோதிட கலையரசி M.தனம் B.A., போன் : 90802 73877 ஸ்ரீ தனம் ஜோதிட நிலையம். அக்கப்போர் நாளிதழ்
ஜோதிடம் அறிவோம் தொடர் – 2 akkappore.news சொடுக்குங்க
மருத்துவ ஜோதிடம்…!!
ஜோதிடம் அறிவோம் தொடர் – 2

மனிதன் நாகரிகத்தில் தொடக்கத்திலேயே இந்த மருத்துவம் ஜோதிடம் இருந்தது அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்தில் என்ற தத்துவம் உருவானது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வான் மண்டலத்தில் கோள்களின் கதிர்வீச்சுகள் பூமியில் உள்ள மூலக்கூறுகளின் மாற்றத்தை ஏற்படுத்துவதை நம் முன்னோர்கள் கண்டறிந்தார்கள்.
ரிக் வேதத்தில் சூரியன் ஆத்ம காரகன் என்றும் ஆரோக்கியத்தை வழங்குபவன் என்றும் கூறப்படுகிறது.
ஆயுர்வேத ஜோதிடத்தில் தர்மம் அர்த்தம் காமம் மோட்சம் ஆகிய நான்கையும் அடைய ஆரோக்கியம் அடிப்படை ஆயுர்வேத மருத்துவமனை உருவான போதே நோயை கண்டறியும் மருந்து உட்கொள்ளும் நேரத்தை தீர்மானிக்கவும் ஜோதிடம் ஒரு கருவியாகவே பயன்பட்டது.

மருத்துவ ஜோதிடத்தில் தொடக்கம் என்பது பஞ்சபூதங்களின் சேர்க்கையில் தொடங்குகிறது.
நிலம், நீர் நெருப்பு காற்று ஆகாயம் ஆகிய ஐந்தும் தனிமங்களும் மனிதனுடைய உடலில் உள்ள வாத பித்தம் கபம் ஆகிய மூன்றையும் தோஷங்களாக இயங்குகின்றன.
மனித உடல் பஞ்ச பூதங்களின் அடிப்படையிலேயே இயங்குகின்றது
நிலம்-மூலாதாரம் நீர் -ஸ்வாதிஷ்டம் நெருப்பு -மணிப்பூரகம் காற்று-அனாஷதம் ஆகாயம்-விசுத்தி மனித உடலில் முழுவதும் பஞ்சபூதங்களின் சமநிலையால் இயங்குகிறது எந்த ஒரு பூதமும் அதிகமாகவோ குறைவாகவோ இருந்தால் உடல் மற்றும் மனநிலை பாதிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு கோளும் ஒரு குறிப்பிட்ட தனிமத்தோடு உடல் உறுப்போடு தொடர்பு உள்ளன இந்த சமநிலை மாறும் பொழுது தான் நோய் உருவாகிறது.
இன்றைய காலத்தில் மருத்துவ ஜோதிடம் ரொம்ப அவசியமாக ஒன்றாக இருக்கிறது நம் ஆரோக்கியம் என்பது ரொம்ப முக்கியமான ஒன்று ஏனென்றால் சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழிக்கு ஏற்ப நம் வாழ்க்கையில் ஆரோக்கியம் இருந்தால் மட்டுமே நாம் அனைத்தையும் பெற்று வாழ முடியும்.
இன்றைய சூழ்நிலையில் நோய்கள் பலவிதம் அதன் தன்மை வீரியம் கால அளவு எப்படி என்று சொல்ல முடியாத அளவுக்கு இன்றைய வாழ்க்கை முறையில் தான் நம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
மருத்துவத்துறையில் அறிவியல் வளர்ச்சி வளர்ந்து விட்ட போதிலும் நோய்களின் தன்மை குறையவில்லை சில ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவம் என்றால் வீட்டில் பாட்டி வைத்தியம் கை வைத்தியம் முடியாத பட்சத்தில் மருத்துவமனை ஒரே மருத்துவர் எல்லா நோய்களுக்கும் அவரே மருத்துவம் பார்ப்பார்.
ஆனால் இன்றைய மருத்துவத்தில் பல பிரிவுகள் உள்ளன அலோபதி ஹோமியோபதி சித்த வைத்தியம் மூலிகை மருத்துவம் நாட்டு வைத்தியம் இப்படி பல பிரிவுகள் இருக்கிறது மருத்துவத்துறை வளர்ச்சி அடைந்தாலும் கூட மனிதனுடைய ஆரோக்கியமும் ஆயுள் காலமும் குறைந்துவிட்டது என்பது நம்ம மறுக்க முடியாத உண்மை.
இன்றைய காலகட்டத்தில் மருத்துவ ஜோதிடத்தில் நோய்களை மட்டுமல்ல எந்த மருத்துவ முறையில் சிகிச்சை எடுக்கலாம் என்பதையும் ஜாதகத்தின் கிரக அமைப்புகளின் மூலம் அறியலாம் மருத்துவ ஜோதிடத்தில் முக்கியமாக ஒரு ஆறு ஏழு மருத்துவ முறைகள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிக அளவு பயன்பாட்டில் உள்ள சில மருத்துவ முறைகள் அலோபதி 6+12 இந்த பாகங்கள் தொடர்பு பெறுவது சூரியன்+செவ்வாய்+ராகு உடனடியாக மருத்துவம் எடுக்க அவசர நிலைக்கு இந்த அலோபதி மருத்துவத்தை தேர்வு செய்யலாம்.
இந்த கிரகங்கள் ஆறாம் பாவத்தில் தொடர்பு பெறும் பொழுதும் இந்த அலோபதி மருத்துவம் ஜாதகர் தேர்வு செய்யலாம்.
ஆயுர்வேத மருத்துவம் 5+8 பாவங்கள் தொடர்பு குரு+சனி+கேது இந்த கிரகங்கள் வலுவாக இருந்தால் ஆறாம் பாவத்தில் ஆறாம் அதிபதி உடன் தொடர்பு பெறும் பொழுது இந்த மருத்துவ முறையை ஜாதகர் தேர்வு செய்தால் மெதுவாக பலன் கிடைக்கும் ஆனால் ஆழமாக குணமாகும்.
ஹோமியோபதி சந்திரன்+ஐந்தாம் பாவம் கேது தொடர்பு நீண்ட நாள் மருத்துவமோ ஆனால் நிரந்தரமான தீர்வு நாட்டு வைத்தியம் 5+8 இந்த பாவங்கள் தொடர்பு பெற்று இருக்கும் போது குரு பலமாக இருந்தால் நாட்டு வைத்தியத்தை தேர்வு செய்யலாம்.
சித்த மருத்துவம் சனி கேது குரு இந்த கிரகங்கள் தொடர்பு பெற்று இருந்தால் அவர்கள் சித்த மருத்துவத்தை நாடலாம் எட்டாம் பாவம் பாதிக்கப்பட்டாலும் அல்லது ஆறு எட்டு தொடர்பு பெற்றால் பரம்பரை நோயாக இருக்கும்.
2+8 குடும்பத்தின் வழிவந்த நோய் 4+8 தாய்வழியின் வந்த நோயாகவும் 9+8 தந்தை வழியில் வந்த தொடர்பான பரம்பரை நோயாகவும் இருக்கும். இளம் வயதிலேயே ஒரு சிலருக்கு எல்லாம் நோய் ஏற்படும். அதாவது ஆறாம் அதிபதி லக்னத்தை பார்த்தால் லக்னத்தில் இருந்தால் லக்னாதிபதியோடு சேர்ந்திருந்தால் லக்னாதிபதியும் ஆறாம் அதிபதியும் சேர்ந்திருப்பது அல்லது ஆறாம் அதிபதி நட்சத்திரத்தில் இருப்பது. ஆறாம் அதிபதியும் எட்டாம் அதிபதியும் தொடர்பு பெற்றிருந்தால் நோய் உடைய தன்மை அதிக அளவு இருக்கும்.ஜாதகருக்கு அடிக்கடி நோய் ஏற்பட்டு கொண்டிருக்கும்..
லக்னமும் லக்னாதிபதியும் சந்திரனும் பலமாக இருந்தால் எந்த நோய் வந்தாலும் அதை தாங்கி குணமாகி சரியாகிவிடும்.
நாலாம் பாவத்தில் ராகு கேது சனி இருப்பது அவர்களுக்கு நல்ல சுகத்தை தராது நாலாம் அதிபதி பலவீனம் அடைந்தால் 6 8 12 வீடுகளில் இருப்பது பாதிப்பை ஏற்படுத்தும் ஆறாம் அதிபதி வக்கிரம் பெற்றிருந்தாலும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது அல்லது நோய் குணமாகுவது போல் குணமாகி திடீரென வீரியமடைந்து குணமாகும் பின்பு மறுபடியும் நோயின் தாக்கம் ஏற்படும்.
ஆறாம் அதிபதியும் ஏழாம் அதிபதியும் 11 ஆம் அதிபதியும் தொடர்பு பெற்ற பொழுது நோயாளிகளுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும் ஏழாம் பாவம் பாதிக்கப்பட்டால் அவர் மருத்துவம் எடுக்கவே மிகவும் சிரமப்படுவார் ஒன்பதாம் அதிபதி தொடர்பு கொண்டால் மருந்தை உடல் ஏற்றுக்கொள்ளும் திறனையும் மருந்து செயல்படும் தன்மையும் தெரிந்து கொள்ளலாம்.
12 ஆம் அதிபதியுடன் தொடர்பு கொள்ளும் பொழுது மருத்துவ முறைகளை மாற்றுதல் மருத்துவமனை அடிக்கடி மாற்றுதல் மருத்துவமனையிலேயே தங்கி மருத்துவமெடுக்கும் சூழ்நிலை ஏற்படும் நோயிலிருந்து எளிதில் விடுபட நாலு 11 தொடர்பு பெற்றால் நோயாளி குணம் அடைவதியும் 11-ஆம் அதிபதி கெடாமல் இருந்தால் பரிபூரணமாக குணமடைவர்.
எந்த காலத்தில் ஜாதகருக்கு நோய் ஏற்படும் அப்படின்னு பார்த்தோம்னா ஆறாம் அதிபதி தசா புத்தி மந்திரம் நடக்கும் காலத்தில் அல்லது ஆறாம் பாவத்தில் ஒரு கிரகம் நின்று தசா புத்தி மந்திரம் நடக்கக்கூடிய காலகட்டத்தில் ஜாதகருக்கு நோய் ஏற்படும் சந்திரனின் மீது கோச்சார ஆறாம் அதிபதி வரும் காலகட்டத்தில் நோய் ஏற்படும் கோச்சார கிரகத்தால் ஏற்படக்கூடிய நோய்கள் தற்சமயம் மட்டுமே இருக்கும் அதுவே திசா புத்திகளால் ஏற்படக்கூடிய நோய்கள் நீண்ட நாட்கள் இருக்கும்.
ஒரு ஜாதகர் நோய்வாய்ப்பட்டிருந்தால் அந்த ஜாதகர் எந்த மருத்துவ முறையை தேர்வு செய்து அவர் மருத்துவம் எடுத்துக் கொள்ளலாம் என்பதை அறிந்து மருத்துவத்தை தொடர்ந்தால் அவர் எளிதில் குணமாகி விடலாம்.
- கோவை ஜோதிட கலையரசி M.தனம்
போன் : 90802 73877, 99767 76632
ஸ்ரீ தனம் ஜோதிட நிலையம், நிர்மலா மாதா ஸ்கூல் பின்புறம், அம்மன் நகர், வெள்ளலூர், கோவை.
செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்.

