
உலக யோகா தினம் நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
இதயொட்டி மதுரை அரசு அருள்மிகு மீனாட்சி கல்லூரியில் நேற்று நாட்டு நலப் பணி திட்டம், சாலை பாதுகாப்புக் குழுவும் இணைந்து இளைஞர்கள் இளைஞிகள் ஆரோக்கியத்தில் யோகாவின் பங்கு என்ற தலைப்பில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.

.நிகழ்ச்சிக்கு கல்லூரி பொறுப்பு முதல்வர் சந்திரா தலைமை தாங்கினார், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி ஓய்வு பெற்ற நிர்வாக அதிகாரி பிச்சை ராஜன் பங்கேற்று யோகாவின் சிறப்புகள், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார். அதைத் தொடர்ந்து ஆசிரியர்களும், மாணவிகளும் எளிமையான பல்வேறு யோகாசனங்களை செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி ஆசிரியர்கள் அலுவலர்கள் செய்திருந்தனர்.


