200-க்கும் மேற்பட்ட செவிலியர் மாணவிகள் யோகாசனத்தில் அசத்தல்: உலக யோகா தினத்தை சிறப்பாக கொண்டாடிய மதுரை மருத்துவக் கல்லூரி
மதுரை மருத்துவக் கல்லூரி செவிலியர் கல்லூரியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு, 200-க்கும் மேற்பட்ட பி.எஸ்.சி நர்சிங் மாணவிகள் பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தினர். உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது.


மதுரை மருத்துவக் கல்லூரி செவிலியர் கல்லூரியின் யோகா நோடல் மையம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அரசு ராஜாஜி மருத்துவமனை தலைமை டீன் டாக்டர் அருள் சுந்தரராஜன், ஆறுமுகம் சரவணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் என். முருகானந்தம்

(M.Sc., Nursing) தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், யோகா நோடல் அதிகாரி திரு. கே. தனபாலன் மற்றும் பயிற்சியாளர் திருமதி சருமதி ஆகியோர் மாணவிகளுக்கு யோகாசனங்களை வழிநடத்தினர். மேலும், என்சிசி அதிகாரி திரு. செல்வராஜ் உட்பட பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.
பத்மாசனம், வஜ்ராசனம், தாடாசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்களை ஒருங்கிணைந்து செய்த 200-க்கும் மேற்பட்ட செவிலியர் மாணவிகள், யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் உலக யோகா தினத்தை சிறப்பாகக் கொண்டாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed