தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில்
சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில்
சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் 3 – 7 – 2026 காலை 10 மணிக்கு தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளியில் சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத விழிப்புணர்வு தின விழா மற்றும் பள்ளி குழந்தைகளுக்கான பொது அறிவு போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியை ப. சாரதா அவர்கள் வரவேற்றார்.
தமிழக அரசு விருதாளர் மற்றும் மன்றத் தலைவர் டாக்டர் மா.சிவக்குமார் தலைமையேற்று நெகிழிப் பைகளின் பயன்பாட்டை குறைத்து துணிப்பை பயன்படுத்தி பூமிப்பந்தை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் உலகளாவிய பிளாஸ்டிக் பை இல்லாத தினத்தின் வரலாற்றை நினைவு கூர்ந்தார் .

மேலும் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ , மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
மாவட்ட கல்வி தன்முனைப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. ஏ. சத்தியமூர்த்தி, கவிஞர் சுப்பு தர்மன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில் இடைநிலை ஆசிரியர் எஸ். ஆர். மீராமாய், டி. லதா, வி. காந்திமதி, எம். கோகிலா, வி. சத்யா, ஆர். விநாயகம் உட்பட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
