
த.வெ.க ஆட்சியில் பத்திரிகையாளர்கள், பத்திரிகையாளர் சங்கங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்…!! – தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் தரும் டிப்ஸ் அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
25 – 07 – 2026
த.வெ.க ஆட்சியில் பத்திரிகையாளர்கள், பத்திரிகையாளர் சங்கங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்…!!
- தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ்
👽
தலைப்பு செய்திகள்
முதல்வர் விஜய் வீட்டில் இருந்து டிபன் பாக்ஸில் கொண்டு வந்த உணவை, தானே தன் வலது கையால் சாப்பிட்டார்
தலைமை செயலகத்தில் காலை முதல் மாலை வரை அரசு பணிகளை மேற்கொண்டார் முதல்வர் ச.ஜோசப் விஜய் அவர்கள்
முதல்வர் ச.ஜோசப் விஜய் அவர்களை கண்டவுடன், தலைதெரிக்க ஓடிய செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள்
நடிகை செல்வி திரிஷா வீட்டுக்கு வெளியில் இருந்து நேரலையில் காத்துக் கிடக்கும் ஊடகங்கள்
உலக அளவில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி சாதனை செய்துள்ள மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா அவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்.
இரண்டாவது முறையாக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஜனநாயகன் படத்தை பார்த்தனர், ஏழைகள் மகிழ்ச்சி.
தமிழகத்தை காப்பாற்றிய முதல்வர் விஜய், அடுத்து இந்தியாவை காப்பாற்ற பிரதமராக வேண்டும்
தமிழகத்தில் லஞ்சம், ஊழல், டாஸ்மாக் படிப்படியாக குறைந்து வருகிறது, மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். எந்த பிரச்சினைகளும் இல்லை
👽
இது போன்ற செய்திகள் மட்டுமே இந்த அரசால் வரவேற்கப்படுகிறது, மானம் மரியாதை எல்லாவற்றையும் இழந்து, TRP மட்டுமே முக்கியம் என்று செயல்படும் சில முன்னணி தொலைக்காட்சிகள் இதற்கு முட்டு கொடுக்கின்றது.
பிரதமர் மோடி போலவே, பத்திரிகையாளர்களை சந்திக்க பயப்படும் முதல்வர் விஜய், ஆனால் அதைப்பற்றி கேட்க முடியாத ஊடக நிறுவனங்கள்.
அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய கட்சிகளை விட மிகவும் மோசமான வகையில் பத்திரிகையாளர்களை கையாளும் த.வெ.க அரசு.
இதற்கு ஒரே தீர்வு, பத்திரிகையாளர்கள் மற்றும் அதன் சங்கங்கள், முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும்
*இதை நாம் செய்யாமல் போனால், ஐந்து ஆண்டுகளில் அரசின் ஒரு அடிமை துறையாக ஊடகத்துறை மாறும் என்பது உண்மை.
தோழமையுடன்*
டி. எஸ். ஆர். சுபாஷ்*
மாநில தலைவர், TUJ


