புத்தர் ஆசையை துறக்கவில்லை …
விரும்பிய வாழ்க்கையை வாழ்ந்தார்…!! சிறப்பு கவிதை கவிஞர் குடந்தை அனிதா
அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

மீள்

புத்தர் ஆசையை துறக்கவில்லை
விரும்பிய வாழ்க்கையை வாழ்ந்தார்…!!

கடைசியா முகம் பாக்குறவுங்க
பாத்துக்கங்க.
என்ற
குரல் கேட்கும் வரை மனதில்
ஆசைகளை தேக்க வேண்டாமே,

உயிர் பிரிந்த பின்பு
ஆத்மா சாந்தி அடையவில்லை
என்று அலையவும் வேண்டாமே

ஆசைக்கு என்ன தெரியும்?
இது, நடு ரோடு என்றும் பாராமல்
புணரும் விலங்கு போல தானே

இயற்கை என்று கடப்பவர்கள் சிலர்
கல் எறிந்து கலைப்பவர்கள் சிலர்

அத்தனைக்கும் ஆசை படு என்ற
அறைகூவலை செவிமடுக்காமல்
ஆசையை நம் விருப்பப்படி கையாள கற்றலே போதுமானது.

புத்தர் ஆசையை துறக்கவில்லை
விரும்பிய வாழ்க்கையை வாழ்ந்தார்.

ஏழையாக பிறந்தவன் வசதியாக வாழ ஆசைபடுகிறான்.

அனைத்து செல்வங்களையும் பெற்ற புத்தர்
ஏழ்மையை கண்டதில்லை

அதை அடையவே அதற்கான
வழியை தேடினார்.
ஏழ்மையை சம்பாதித்தார்

இருப்பதை இழப்பதும்
வலி தான்
விரும்பியே வலியை
சம்பாதித்ததனால் தான்

புத்தர் இன்றும் வாழ்கிறார் நம்முடன்
ஆத்ம சாந்தியடைந்து.

குடந்தை_அனிதா

✍️

மீள்

2021 memories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed