சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு…!! அக்கப்போர் நாளிதழ், akkappore.news சொடுக்குங்க

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் தகர ஷெட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது மருந்து உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து இரண்டு முறை வெடித்ததில் விண்ணை முட்டும் அளவுக்கு புகை வெளிவந்தது. சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் அதிர்வை ஏற்படுத்தியது

ராம்பிரகாஷ், இன்னாசிமுத்து, ஐயப்பராஜா, பாண்டித்துரை ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிய ராமச்சந்திரனை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வந்த ராமச்சந்திரன் (40) உயிரிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed