

சிற்பங்களுக்கு உயிர் கொடுத்து அவைகள் தொலைந்து விட்டது போதும் …. மெய்யும் செய்…!! சிறப்பு கவிதை – கவியன்பன் சாரா – அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

மெய்யும் செய்…!! சிறப்பு கவிதை
மேகங்களைக்
கூந்தல்களிலிருந்து
விடுவியுங்கள்
கொஞ்சம் மழை பெய்யட்டும்…..
தூது சென்ற
தென்றல்களை
திரும்ப அனுப்புங்கள்
பூமி குளிரட்டும்….
நிலவை
தேய்த்து தேய்த்து
கவி வளர்த்தது போதும்….
மலர்களுக்கு
மங்கையராய்
வேடமிட்டது போதும்…..
மானென்று பெண்ணை
பாடி பாடி
சிங்கங்களுக்கு
இரையாக்கியது போதும்…..

சிற்பங்களுக்கு
உயிர் கொடுத்து
அவைகள்
தொலைந்து விட்டது போதும்…..
மேற்சொன்னவைகள்
இல்லாமலும்
கவி செய்து பார்ப்போம்….
மெய் கூட கவிதைக்கு
அழகென்று சேர்ப்போம்…….
- கவியன்பன்
சாரா
செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்



