

சோழவந்தானில் மழை நீர் கால்வாய் செல்லும் நீர்வழி பாதையை சீரமைக்க ராயல் கார்டன் குடியிருப்போர் நலச்சங்கம் கோரிக்கை…!! N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ் akkappore.news Just CliCK now

சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 ஆவது வார்டு ராயல் கார்டன் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
மனுவில் தங்கள் பகுதியில் மழை நீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் செல்லும் பகுதியை தனியார் சிலர் ஆக்கிரமித்து வைத்திருப்பதால் கழிவுநீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுவதாகவும் மழைநீர் மற்றும் கழிவு நீர் செல்ல வழி இல்லாததால் மழைக்காலங்களில் மழைநீர் கழிவுநீருடன் கலந்து வீடுகளுக்குள் வருவதால் பாம்பு தேள் போன்ற விஷ பூச்சிகள் வீட்டிற்குள் வந்து ஆபத்தை விளைவிக்க கூடிய நிலை இருப்பதாகவும் ஆகையால் தங்கள் பகுதியில் கழிவு நீர் மற்றும் மழைநீர் தேங்காதவாறு ஏற்கனவே உள்ள கால்வாய் பகுதியை சீரமைத்து மழை நீர் மற்றும் கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.
இது குறித்து சோழவந்தான் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமாரிடம் ராயல் கார்டன் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் மனு வழங்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட செயல் அலுவலர் இதுகுறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்கள் கூறினார்கள்.
N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ்


