‘தமிழ் மாநில பகுஜன் சமாஜ்’ கட்சியில் அஜிதா ஆக்னல் சேருவாரா? மீண்டும் தவெகவிலையே தான் தொடருவாரா? அக்கப்போர் நாளிதழ் Akkappore.com சொடுக்குங்க
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி (BSP) தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், தனது கணவரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் (ஜூலை 5, 2025) சென்னையில் ‘தமிழ் மாநில பகுஜன் சமாஜ்’ (Tamil Manila Bahujan Samaj) என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். நீலம் மற்றும் வெள்ளை நிறங்கள் கொண்ட புதிய கொடியையும், கட்சியின் பெயரையும் அவர் அன்று அறிமுகப்படுத்தினார். இதன் பின்னர் இவரது முன்னெடுப்புகள் அனைத்தும் TMBS யே சார்ந்துள்ளது.
ஜனவரி 10ம் தேதி தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியனின் நினைவு தினத்தில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வத்திருந்த பொற்கொடியை, தூத்துக்குடி தவெக பிரமுகர் அஜிதா நேரில் சந்தித்து அறிமுகபடுத்திக் கொண்டார். தவெக வில் ஓடி ஆடி வேலை பார்த்த இந்த பெண்ணின் எதிர்கால கணவை காவு வாங்கியதை மறக்கவும் முடியலை, மன்னிக்கவும் முடியலை. மேலும் தவெக தலைமை மீது விரக்தியில் இருக்கும் அஜிதா, விஜயின் ஒப்புதலுடன் தலைமையால் அறிவிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் உள்ப்பட ஏனைய பொறுப்பாளர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவும் இல்லை, பொறுப்பாளர்களுடன் இணைந்து களப்பணி செய்வேன் என்றும் உறுதியளிக்கவில்லை. இருந்த போதிலும் தனி ஒருவனாக ஒரு சில கட்சிப் பணிகளை தனது ஆதரவாளர்களுடன் செயல்பட்டும் வந்தார். மேலும் ஒரு சிலரால் அஜிதாவை தூத்துக்குடி தொகுதி தவெக வேட்பாளர் என்றும் அடையாளப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வட சென்னை மேற்கு மாவட்ட ‘தமிழ் மாநில பகுஜன் சமாஜ்’ கட்சியின் சிறுபான்மை அணி சார்பாக மாவட்ட செயலாளர் முகமது நாசீர் தலைமையில் ஓர் மாபெரும் நலத்திட்ட விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தவெக மீது விரக்தியில் இருக்கும் தூத்துக்குடி அஜிதா ‘தமிழ் மாநில பகுஜன் சமாஜ்’ கட்சியின் விழாவில் கலந்து கொண்டு பொற்கொடிக்கு மரியாதை செலுத்திய சம்பவம் அரசியலில் பலரை பலவிதமான எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கியுள்ளது. அஜிதா ‘தமிழ் மாநில பகுஜன் சமாஜ்’ கட்சியில் பொற்கொடி தலைமையேற்று இணைய போகிறாரா? (அ) பொற்கொடி மூலமாக தவெக தலைமைக்கு தூது விட்டு சமாதானமாக செல்ல வழி தேடி இவரை நாடினாரா? என்பது தான் இன்றைய அரசியலில் பேசும் பொருளாகி வருகிறது. மேலும் மாற்று அரசியலை முன்னெடுத்து மாற்றத்தை நோக்கி பயணிக்கும் இளைய தலைமுறையினருக்கு அஜிதா ஓர் புதிய வழித்தடத்தை உருவாக்கிட பொற்கொடியை சந்தித்தாரா? என்பதற்கெல்லாம் வருகின்ற தேர்தல் தான் முடிவுரை எழுதும்.
மீனவ சமுதாய பெண்ணுக்கு தவெக வில் ஏற்பட்ட அநீதியை வென்றெடுக்க ‘தமிழ் மாநில பகுஜன் சமாஜ்’ கட்சி கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதுவரையில் இவர்களுடன் நாமும் காத்திருப்போம்.
