அழகும் அறிவும் அன்பும் நேசமும் காதலும் பிரியமும் நிறைந்த தேவதை தீபுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்…!! இப்படிக்கு உன் நேசத்தோழீ – கவிஞர் நிஷா ரெஹ்மான் அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

சிறகடிக்கும் பட்டாம்பூச்சியை நினைவுபடுத்துபவள்….

சில்லென்ற மழைத்துளியை மனதில் நிலைநிறுத்தச் செய்பவள்….

.தன்னைச்சுற்றிலும் உள்ள உறவுகளை அதீதமாய் நேசிப்பவள்….

.வாழ்க்கையை மிக மிக எளிதாக கடக்கும் திறமை வாய்ந்தவள்.. ….

இவளுடன் பழகும் நினைவுகள் மிகவும் ரம்மியமானவை….

நீண்ட இடைவெளிக்கு பிறகு முதன்முதலாக மழைத்துளி மண்ணைத் தொடும் நாளில் அதீத ஆசையுடன் ….

அதை தரிசிக்கும் உணர்வை இவளோடு பழகிய நாட்களில் உணர்ந்திருக்கிறேன்….

சோகத்தை தூக்கியெறியச் செய்யும் இவள் பேச்சில் வருத்தங்கள் வாரிச் சுருட்டி வாசல் கடந்து போயிருக்கிறது….

.வானவில் வண்ணம் மனதை அழகு படுத்தியிருக்கிறது…,,

என்னைப்போலவே டைரி மில்க் பிரியை….

ஆழமான அன்புக்கும் அர்த்தமுள்ள புன்னகைக்கும் அளவில்லா நேசத்திற்கும் சொந்தக்காரி……

அழகும் அறிவும் அன்பும் நேசமும் காதலும் பிரியமும் நிறைந்த தேவதை தீபுக்கு பிறந்தநாள்….

மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தீபு…லவ்..யூ…

இப்படிக்கு
உன் தோழி
கவிஞர் நிஷா ரெஹ்மான்

தொகுப்பு:

செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed