உசிலம்பட்டியில் காமராஜர் 124-வது பிறந்தநாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் மரியாதை…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news

உசிலம்பட்டி, ஜூலை: 15: முன்னாள் தமிழக முதல்வரும், பெருந்தலைவர் காமராஜர் , 124-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் வழிகாட்டுதலின் படியும், மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் உலகநாதன் ஆலோசனையின் படியும், உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு, உசிலம்பட்டி வட்டார காங்கிரஸ் தலைவர் பி.எம் வினோத் கண்ணன் தலைமை தாங்கினார். இதில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு, பெருந்தலைவர் காமராஜரின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவர் தவமணி, வட்டார துணைத் தலைவர்கள் ரங்கமலை, அர்ஜுனன், வட்டார பொதுச் செயலாளர்கள் தசர பாண்டியன், முத்துக் கண்ணன், முத்துபாண்டி, பாண்டி, தங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed