கானக்குயில் ஜானகி அம்மா..!! அன்னக்கிளி முதல் சிங்காரவேலனே வரை… ஒரு யுகத்தின் குரல் ஓய்ந்தது.!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

தென்னிந்திய சினிமாவின் ‘இசைக்குயில்’ என்று அழைக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி அவர்கள் வயது முதிர்வு காரணமாக மைசூருவில் 11.07.2026 காலமானார். அவருக்கு வயது 88. அவரது குரல் இல்லாமல் 70, 80, 90-களின் தமிழ் சினிமாவை நினைத்துக்கூட பார்க்க முடியாது.

“அன்னக்கிளி உன்னைத் தேடுதே” முதல் “சிங்காரவேலனே தேவா” வரை, ஒவ்வொரு பாடலும் ஒரு தலைமுறையின் நினைவு. பல்லபட்லாவில் இருந்து புகழின் உச்சிக்கு ஆந்திரா, குண்டூர் மாவட்டம் பல்லபட்லாவில் 1938 ஏப்ரல் 23 அன்று பிறந்தவர் எஸ். ஜானகி. சிறுவயதிலேயே இசையில் ஆர்வம். நாதசுர மேதை பைடிசாமியிடம் முறையாக பயின்றவர்.

1956-ல் அகில இந்திய வானொலி போட்டியில் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத்திடமே பரிசு வாங்கியவர். 1957-ல் ‘விதியின் விளையாட்டு’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அடுத்த நாளே கண்டசாலாவுடன் தெலுங்கு பாடல். அறிமுகமான முதல் வருடத்திலேயே 6 மொழிகளில் 100 பாடல்கள். அதுதான் ஜானகி.

இளையராஜாவும் ஜானகியும் எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையில் ‘கொஞ்சும் சலங்கை’ படத்தின் “சிங்காரவேலனே தேவா” அவருக்கு முதல் பெரிய அடையாளம். ஆனால் இளையராஜா இசையில் வந்த அன்னக்கிளி தான் அவரை கோடிக்கணக்கான இதயங்களுக்கு கொண்டு சேர்தது. அந்த படத்தின் எல்லா பாடல்களும் ஹிட்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்பட 17 மொழிகளில் சுமார் 48,000 பாடல்கள். 5 வயது குழந்தையாகவும், 60 வயது பாட்டியாகவும் குரல் மாற்றி பாடும் வித்தை அவருக்கு மட்டுமே சொந்தம். விருதுகளும், ஓய்வும் 4 முறை தேசிய விருது.

தென்னிந்திய 4 மாநில அரசுகளிடமிருந்தும் சேர்ந்து 33-க்கும் மேற்பட்ட மாநில விருதுகள். 2016-ல் “போதும்” என்று சொல்லிவிட்டு திரையுலகில் இருந்து ஒதுங்கி, மைசூருவில் அமைதியான வாழ்கை வாழ்ந்து வந்தார். மகனை இழந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள், இன்று தாயும் பிரிந்துவிட்டார். 69 ஆண்டு கால இசைப்பயணம் இத்துடன் முடிவுக்கு வந்தது. தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் மௌனமானாலும், அவரது பாடல்கள் என்றும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அஞ்சலி

Arshath Erode

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed