

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பட்டா வழங்க சின்னியம்பாளையம் அத்திக்குட்டை அண்ணா நகர் மக்கள் கலெக்டரிடம் மனு…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் பவன்குமார் உறுதி

கோவை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பட்டா வழங்ககோரி கோவை சின்னியம்பாளையம் அத்திக்குட்டை அண்ணா நகர் பகுதி பொது மக்கள் கோவை மாவட்ட கலெக்டரிடம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது மாவட்ட நிர்வாகம் நீதிமன்ற உத்தரவு விவகாரத்தில் மெத்தன போக்கை கடைப்பிடிப்பதாக குற்றம் சாட்டினர்.
கோவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் தாங்கள் 350 குடும்பத்தினர் கடந்த 60 ஆண்டாக மேற்கண்ட ஊரில் குடியிருந்து வருகிறோம். கடந்த 1998 ம் ஆண்டு வரை சொத்து வரி செலுத்தி வந்தோம். எங்கள் ஊரில் அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதி இல்லாத சூழலில் மின் இணைப்புகள் வழங்க மின்வாரியம் மறுத்தது.

அந்த சூழலில் உயர்நீதிமன்றத்தில் நீதிப்பேராணை WP. 1232 / 2006 தாக்கல் செய்து சட்டப்போராட்டம் நடத்தி மின் இணைப்பு பெற்றோம். மேலும் கடந்த 1990 ம் ஆண்டு அப்போதைய கோவை மாவட்ட கலெக்டர் எங்கள் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க உத்தரவிட்டார். மேலும் கடந்த 2004 ம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு ஆளுநர் அவர்களும் பட்டா வழங்க உத்தரவிட்டார்.
மேலும் அதன்பேரில் எழுந்த வழக்குகளில் அத்திக்குட்டை அண்ணா நகரில் உள்ள அனைத்து தரப்பினரையும் விசாரித்து பட்டா வழங்க கடந்த 2010 ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டது. இறுதியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நாங்கள் பட்டா கோரி தாக்கல் செய்த நீதிப்பேராணை எண் WP no. 8972 / 2023. பட்டா கோரி மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டும், உத்தரவு தேதியில் இருந்து 12 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி பட்டா வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.
அதனால் அத்திக்குட்டை அண்ணா நகரில் குடியிருப்போர்களுக்கு நில அளவை செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்… என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதையடுத்து கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் பவன்குமார், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு மீது உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அத்திக்குட்டை அண்ணா நகர் பகுதி மக்களிடம் உறுதி அளித்தார்.
இதுகுறித்து அண்ணா நகர் பகுதி மக்கள் கூறுகையில் 60 ஆண்டாக 350 குடும்பங்கள் வசித்து வருகிறோம். சொத்து வரி கட்டப்பட்டு உள்ளது. மின் இணைப்பு பெற்று கட்டணம் செலுத்தி ரஷீது பெற்று உள்ளோம். வீட்டு மனை பட்டா வழங்க 12 வாரத்தில் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றது. இது உயர் நீதிமன்றத்தையே அவமதிக்கும் செயலாக உள்ளது என கொந்தளிப்புடன் கண்டனம் தெரிவித்தனர். https://youtu.be/Itd5Z0PVHwY?si=ExVtbyJ7UaqtL_Aw

Sun tv சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பட்டா வழங்கக்கோரி கோவை சின்னியம்பாளையம் அத்திக்குட்டை அண்ணா நகர் பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட கலெக்டரிடம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு…!! 22-6-26 monday pettion ………….. https://youtu.be/nMVA0trniRo?si=necK9qm4DsTFWiEyஅத்திக்குட்டை அண்ணா நகர் பகுதி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!! 24-6-2026 (புதன்கிழமை) தமிழன் தொலைக்காட்சி காலை 8.30 மணிக்கும்…* 10.30 மணிக்கும் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது…!! ……………. https://youtube.com/shorts/X10uddAyEMo?si=zhj7sdr3YyhntGCw



நன்றி …நன்றி…நன்றி..!!Kovai times

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பட்டா வழங்கக்கோரி கோவை சின்னியம்பாளையம் அத்திக்குட்டை அண்ணா நகர் பகுதி பொது மக்கள் கோவை மாவட்ட கலெக்டரிடம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு…!!

நன்றி: akkappore.news Youtube channel https://youtu.be/eSOx-5hue4Q?si=TJeUXbbyeS5u-Hdt

…………………… akkappore.news இணைய நாளிதழ் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பட்டா வழங்க சின்னியம்பாளையம் அத்திக்குட்டை அண்ணா நகர் மக்கள் கலெக்டரிடம் மனு…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க https://akkappore.news/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/ …………… சிறுவாணி எக்ஸ்பிரஸ் Siruvani express https://youtu.be/i3-Xls5zU0s?si=M_ZM-dKfAz7n55Ei60 வருட போராட்டம் … 5 தலைமுறையின் ஏக்கம் … கோவையில் ஓர் அத்திப்பட்டி …!!நிறைவேறாத கோரிக்கையால் பொது மக்கள் எடுத்த அதிரடி முடிவுமுதல்வருக்கு முன்வைக்கும் கோரிக்கைகள் என்ன தெரியுமா ??????

