சென்னை உயர் நீதிமன்றத்தின் 55-வது புதிய தலைமை நீதிபதியாக சிஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் பதவி ஏற்றார்.

அவருக்கு தமிழக ஆளுநர் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள், அமைச்சர் ரகுபதி துணை சபாநாயகர் பிச்சாண்டி எதிர்க்கட்சியை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி சண்முகம் அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ் ராமன் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு பார் கவுன்சில் நிர்வாகிகள், பெண் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

பத்திரிக்கையாளர் என்ற முறையில் நானும் சன் தொலைக்காட்சி செய்தியாளர் ரமேஷ் இருவர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டிருந்தோம்…

பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு அங்கு நடைபெற்ற விருந்தோம்பலில் நான் மட்டுமே கலந்து கொண்டேன்.

இதனை தொடர்ந்து புதிதாக பதவி ஏற்ற தலைமை நீதிபதி தர்மதிகாரி அவர்களை சந்தித்து அவருக்கு பூங்கொத்துக் கொடுத்து
வாழ்த்து தெரிவித்தேன்.

  • – புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தியாளர் சுப்பையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed