
ஜோதிடத்தில் விதியும் மதியும்…!! ஜோதிடம் அறிவோம் தொடர் – 10 கோவை ஜோதிட கலையரசி M.தனம் B.A., போன் : 90802 73877 ஸ்ரீ தனம் ஜோதிட நிலையம். அக்கப்போர் நாளிதழ் akkappore.news

விதி மற்றும் மதி ஆகிய இரண்டுக்கும் இடையே உள்ள ஆழமான தொடர்பையும் ஜோதிட ரீதியாகவும் தத்துவ ரீதியாகவும் அவற்றுக்குள் உள்ள விரிவான விளக்கத்தை பார்க்கலாம் ஜோதிடத்தில் விதி என்பது ஏதோ தற்செயலாக நடக்கும் ஒன்று அல்ல அது துல்லியமான கர்மாவின் கணக்கு ஆகும்.
கர்மாவின் வெளிப்பாடு நம்முடைய சனாதன தர்மத்தில் கர்மா மூன்று வகைப்படும் சங்கீதகர்மா சேமித்து வைக்கப்பட்ட வினைகள் பிரார்த்தகர்மா இது பிறவியிலேயே அனுபவிக்க எடுத்து வந்த வினைகள் ஆகாமிய கர்மா இனி செய்யப் போகும் வினைகள் இதில் பிராத்தகர்மா தான் விதி ஆகும்.
மாற்ற முடியாத சில விஷயங்கள் உள்ளது அதாவது நீங்கள் எந்த தேசத்தில் எந்த குலத்தில் யாருக்கு மகனாக மகளாக பிறக்க வேண்டும் உங்கள் மரபணு டி என் ஏ அமைப்பு எப்படி இருக்க வேண்டும் உங்கள் ஆயிலின் எல்லை என்ன என்பதை விதியே தீர்மானிக்கிறது.
இவற்றை மனித ஆற்றலால் மாற்ற முடியாது. ஜாதகத்தில் லக்னம் லக்னாதிபதி மற்றும் ஐந்தாம் பாவம் ஒன்பதாம் பாவம் ஆகிய ஸ்தானங்கள் ஆகியவை விதியின் பலத்தை குறிக்கும்.

சூரியன் ஆன்மகாரகன் என்பதால் ஆன்மாவின் பயணமாகிய விதியை காட்டும் முக்கிய கிரகமாகிறது.
மதி என்பது வெறும் பொது அறிவோ அல்லது புத்திசாலித்தனமும் மட்டும் அல்ல அது சூழ்நிலைகளை கையாளும் மனப்பக்குவம் மற்றும் ஆன்ம விழிப்புணர்வு விதி நமக்கு ஒரு சூழலை தரும்போது நாம் எப்படி எதிர்வினை ஆற்றப் போகிறோம் என்று தேர்ந்தெடுக்கும் சுதந்திரமே மதி.
மனமும் புத்தியும் ஜோதிடத்தில் மதி என்பது இரண்டு கிரகங்களின் சேர்க்கை சந்திரன் மனம் சூழ்நிலைகளை எதிர்கொண்டு மன தைரியம் மற்றும் உணர்ச்சி மேலாண்மை புதன் புத்தி தர்க்க ரீதியாக சிந்தித்து நல்வழி ஏது தீவழி ஏது என்று பிரித்தெறியும் விவேகம் ஜாதகத்தில் ஐந்தாம் வீடு பூர்வ புண்ணியம் புத்தி கூர்மை மதியை குறிக்கும்.

முற்பிறவிலே நாம் செய்த நல்வினைகளின் விளைவாக இப்பிறவியில் சிறந்த மதி நல்ல புத்தி நமக்கு அமைகிறது.
விதியை மாற்ற முடியாது தண்டவாளம் போன்று மாறாதது கடந்த காலத்தில் முற்பிறவியின் அறுவடை என்று சொல்லலாம் நமக்கு வெளியே இருந்து வரும் சூழ்நிலைகள் மற்றும் சம்பவங்கள் எல்லாம் விதிப்பயன் லக்னம் சூரியன் ஒன்பதாம் அதிபதி ஐந்தாம் அதிபதி இது எல்லாம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது.
உங்களுக்கு வரும் நோய் அல்லது உடல் பலவீனம் இது எல்லாம் விதியை வைத்து சொல்ல முடியும். மதி என்றால் மாறக்கூடியது. வளரக்கூடியது வண்டியின் வேகம் போன்றது.

நம்முடைய மனதையும் புத்தியையும் கொண்டு செயல் படுவது நிகழ்காலத்தில் நாம் விதைக்கும் விதை நமக்குள் இருந்து வெளிப்படும் சிந்தனை மற்றும் தேர்வுகள் எல்லாம் இந்த மதியை வைத்து தான் சந்திரன் புதன் இவர்கள்தான் தீர்மானிக்கின்றார்கள் விதியின் பாதிப்பின் காரணமாக ஒருவருக்கு நோய் ஏற்படுகிறது என்றால் அவர் உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்க வழக்கத்தால் அந்த நோயை கட்டுப்படுத்துவது தான் மதி.
ஒருவர் வண்டியில் தலைக்கவசம் அணிந்து செல்வது அதாவது விபத்து ஏற்படும் ஆனால் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் தப்பிப்பது அந்த தலைக்கவசத்தினால் அங்கு விபத்து ஏற்படுவது விதி அதை நாம் மதிகொண்டு பாதிப்பை குறைத்துக் கொள்ளலாம்..

ஒருவருக்கு விதிப்படி ஒரு குறிப்பிட்ட துறையில் நஷ்டம் வரப்போகிறது என்று ஜாதகம் காட்டுகிறது அவர் தன் மதியை பயன்படுத்தி ஜோதிட ஆலோசனையின் பெயரில் அந்த தொழிலை பெரிய அளவில் முதலீடு செய்வதை தவிர்த்து எச்சரிக்கையாக இருந்தால் வரவிருக்கக்கூடிய பேரெளுவை சிறிது இழப்போடு கடந்து விடலாம் சில நேரங்களில் கடுமையான சோதனைகள் வரும்போது இது என் கரும வினை விரைவில் கடந்து விடும் என்று மதியால் அறிவால் உணர்ந்து அமைதியாக இருப்பது விதியை வெல்ல ஒர் வழி. விதி கூட்டும்போது மதி மயங்கும் சில நேரங்களில் எவ்வளவு பெரிய புத்திசாலியும் மிக சாதாரணமான தவறை செய்து வீழ்ந்து விடுவார்கள்.
இதற்கு காரணம் விதியின் அதிதீத வேகம் ஜாதகத்தில் ராகு கேதுக்களின் தாக்கம் ஏழரை சனி அல்லது பாத திசாக்கள் நடக்கும்போது மதியின் அதிபதிகளான சந்திரனும் புதனும் மறைவு ஸ்தானங்கள் பெற்றோலோ அல்லது பாவ கிரகங்களால் பாதிக்கப்பட்டாலோ மதி மயக்கம் ஏற்படும்.
தெரிந்தே தான் செய்தேன். ஏன் செய்தேன் என்று தெரியவில்லை என்று புலம்புவார்கள் இந்த அமைப்பில் ஏற்படும்.

சுருக்கமாகச் சொன்னால் விதி என்பது காரின் உடைய இஞ்சின் மற்றும் சாலை உங்களால் சாலையை மாற்ற முடியாது மதி என்பது காரின் உடைய ஸ்டியரிங் மற்றும் பிரேக் காரை எப்படி ஓட்ட வேண்டும் என்பது உங்கள் கையில் சாலை மோசமாக இருந்தாலும் விதியின் பலவீனமாக இருந்தால் நீங்கள் கவனமாக ஸ்டேரிங்கை பிடித்து அந்தப் பாதைக்கேற்ற வேகத்தில் பிரேக்கை உபயோகித்து கவனமாக பயணம் செய்யலாம்
மதியை பயன்படுத்தி. இந்த மதியை பயன்படுத்தி நல்ல காரியங்கள் தான தர்மங்கள் பிறருக்கு உதவுதல் நம்முடைய எதிர்கால விதியை அடுத்த பிறவியின் விதியையும் மாற்றியமைக்கும் ஆற்றல் கொண்டவை அதனால் நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர்வினை உண்டு என்பதை மனதில் வைத்து செயல்பட்டால் பாதிப்பின் அளவை குறைத்துக் கொள்ளலாம்.
- கோவை ஜோதிட கலையரசி M.தனம் B.A., போன் : 90802 73877 ஸ்ரீ தனம் ஜோதிட நிலையம்.
அக்கப்போர் நாளிதழ் akkappore.news



