நெருப்பெட்டி…! நெஞ்சை சுடும் கவிதை…!! வே.கல்யாண்குமார்

நெருப்பெட்டி.!
~~~~~~
படிக்கத்தான் எங்களுக்கு ஆசை..!
ஆனா.. நெருப்பெட்டிக் கம்பெனியில் சரஸ்வதிக்குப் பூசை!

கையில் பாரு கந்தகங்கள்.. கண்களிலே கனவு!
பையில் புத்தகம் இல்லை கையில் பாஸ்பரசு துகளு..!

அப்பா கடைக்கு..
அம்மா வேலைக்கு..
கஷ்டம் மட்டும் தீரலே!
ஆசைப் பட்டேன்
படிப்பதற்கே.. ஆசை
நிறைவேறலே!

பட்டாசு சத்தத்திலே
எங்கள் குரல் கேட்கலே..
நெருப்பட்டிக் குச்சிகளாய்
எங்கள் வாழ்வு மாறலே!

தீ விபத்து.. தீக்காயம்..
தீரும் ஒரு நாளிலே..
தீயாக எரியும் மனசு ..
இன்னும் இங்கே அணையலே.!

பாப்பாக்களும்.. பாலகனும்.. தீப்பெட்டி செய்கயிலே.. பட்டாசு வெடித்திடவும் என் மனசு ஏற்கலே..!

நெருப்பெட்டி உள்ளேதான் அடுக்கி வைத்தக் குச்சிகள்.. உரசுகின்ற போதெல்லாம்.. தீப்பிடிக்கும் கனவுகள்..!


வே.கல்யாண்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed