நோய் தீர்க்கும் தன்வந்திரி பகவான் ; மருத்துவ ஜோதிடம்…!!
-கோவை ஜோதிட கலையரசி M.தனம் B.A., போன் : 90802 73877 ஸ்ரீ தனம் ஜோதிட நிலையம். அக்கப்போர் நாளிதழ் ஜோதிடம் அறிவோம் தொடர் – 6* akkappore.news சொடுக்குங்க

மருத்துவ ஜோதிடம் என்பது ஞானிகளின் காலம் முதல் தொண்டு தொட்டே வந்தது .வேத ஜோதிடம் செதுக்கப்பட்டே வந்திருக்கிறது.

ஜோதிடத்தில் பல பிரிவுகள் இருந்தாலும் மருத்துவ ஜோதிடம் முக்கியமான ஒன்று. அன்றைய காலகட்டத்தில் இதன் தேவைகள் குறைவாக இருந்தது.

ஆயினும் ஒரு மனிதனுக்கு தேவைப்படும் பொதுவான பலன்களை அறிவதில் ஆர்வம் காட்டினார்கள்.

ஆனால் இப்போது மனிதனை வேதனைப்படுத்தும் நோயைப் பற்றி அறிந்து கொள்ள மருத்துவம் ஜோதிடம் இன்றைய காலகட்டத்தில் அவசியமான ஒன்றாக இருக்கிறது.

ஒருவர் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது வரும் என்றால் திருமணம் தொழில் வீடு கட்டுதல் சொத்து படிப்பு ஆரோக்கியம் இதைப்பற்றி புரிந்து கொள்வதற்காக மட்டுமே ஜோதிடம் பார்ப்பார்கள்.

அதில் நம் ஆரோக்கியம் பற்றி ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் அதிக அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து பார்ப்போம். நம் ஆரோக்கியம் என்பது ரொம்ப முக்கியமான ஒன்று.

ஏனென்றால் சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழிக்கு ஏற்ப நம் வாழ்க்கையில் ஆரோக்கியம் இருந்தால் மட்டுமே நாம் அனைத்தையும் பெற்று வாழ முடியும்.

இன்றைய சூழ்நிலையில் நோய்களில் பலவிதம் அதன் தன்மை வீரியம் கால அளவு எப்படி என்று சொல்ல முடியாத அளவுக்கு இன்றைய வாழ்க்கை முறையில் தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வளவு மருத்துவமனைகள் இருந்ததா என்று பார்த்தால் இல்லை .மருத்துவர்களும் இல்லை நோய்களும் இல்லை இன்று தெருவிற்கு தெரு மருத்துவமனைகள் என்று பெருகி விட்டது.

ஒரு குடும்பத்தில் சக்கரைநோய் ,ரத்த அழுத்தம் இல்லாத வீடே இல்லை என்று சொல்லலாம் அந்த அளவுக்கு நாம் உணவு பழக்க வழக்கங்கள் வாழ்வியல் முறையில் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது.

மருத்துவத் துறையில் அறிவியல் வளர்ச்சி வளர்ந்து விட்ட போதிலும் நோய்களின் தன்மைகள் குறையவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவம் என்றாலே வீட்டில் பாட்டியின் கை வைத்தியம் முடியாத பட்சத்தில் மருத்துவமனை .ஒரே மருத்துவர் எல்லா நோய்களுக்கு அவரே மருத்துவம் பார்ப்பார்.

ஆனால் இன்று மருத்துத்தில் பல பிரிவுகள் உள்ளது அலோபதி ஹோமியோபதி ,சித்த வைத்தியம் ,மூலிகை மருத்துவம் ,அக்குபிரஷர் நாட்டு வைத்தியம் ,வர்மா, மலர் மருத்துவம் இப்படி பிரிவுகள் கூடிக்கொண்டே செல்கிறது.

நோய்கள் தாக்கங்கள் அதிகமாய் கொண்டே தான் போகிறது. வாழ்க்கை முறை மாற்றமே இதற்கு காரணம். பழக்கவழக்கங்கள் வாழ்வியல் முறை இயற்கை கால சூழ்நிலைகள் எல்லாம் மாற்றங்களுக்குமே நோய்கள் அதிகரிக்கான காரணங்களாக இருக்கிறது.

மருத்துவ துறையில் அறிவியல் இன் வளர்ச்சி அடைந்தாலும் கூட மனிதனுடைய ஆரோக்கியமும் ஆயுள் காலமும் குறைந்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

ஜாதகத்தில் நாம் நோயைப் பற்றி அறிந்து கொள்ளக் கூடிய பாவம் என்று சொன்னால் ஆறாமிடம் ஆகும் .லக்னத்திலேயே ஆறாம் அதிபதி இருந்தால் அல்லது லக்னாதிபதி ஆறாம் இடத்தில் இருந்தால் அடிக்கடி மருத்துவம் எடுத்து கொண்டு இருப்பார்கள்.

லக்னத்தை ஆறாம் அதிபதி பார்ப்பது ஆறாம் அதிபதியும் லக்னாதிபதியும் இணைந்து இருப்பது ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு கொண்டாலும் இவர்களுக்கு உடல் ஆரோக்கியம் குறைவாகவே இருக்கும்.

ஆறாம் அதிபதியுடன் எட்டாம் அதிபதியின் தொடர்பு கொள்ளும் பொழுது நோயின் தாக்கம் அதிக அளவில் இருக்கும். லக்னம் தான் நம்மளுடைய ஆரோக்கியத்தை குறிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியையும் குறிக்கும் ஐந்தாம் பாவம் என்பது நோய் வந்த பின்பு குணமாக கூடிய அமைப்பை குறிக்கும். லக்னமும் ஐந்தாம் அதிபதியும் பலம் பெற்று இருந்தால் அவர்கள் நோயின் பிடியிலிருந்து மீண்டு வந்து விடுவார்கள்.

லக்னம் ஒற்றைப்படை ராசியில் தொடர்பு கொண்டால் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும் லக்னமும் சந்திரனும் பலமாக இருந்தாலும் அதைத் தாங்கிக் கொள்ளும் பலம் இயற்கையாகவே அவர்களுக்கு இருக்கும்.

ஆறாம் அதிபதியுடன் எட்டாம் அதிபதியும் லக்னாதிபதியும் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு நாள்பட்ட நோய்கள் ஏற்படும் தொடர்ந்து மருத்துவங்கள் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

உங்கள் ஜாதகத்தில் உள்ள ஆறாம் பாவத்தில் அல்லது ஆறாம் அதிபதியின் மீது கோச்சார கிரகங்கள் ராகு ,கேது ,செவ்வாய் ,
சனி வரும் பொழுது உங்கள் ஆரோக்கியம் பாதிக்கும்.

முக்கியமான கிரக அமைப்புகள்

சூரியன் சந்திரன் நீச்சம் அடைந்து பலவீனமாக இருப்பது . பாவ கிரகங்களுடன் சனி ராகு கேது சேர்வது அல்லது பார்வை பெறுவது நோய்வாய் ஏற்படும்.

சுகம் தானம் என்று சொல்லக்கூடிய நாலாம் பாவத்தில் ராகு கேது சனி இருப்பது அவர்களுக்கு நல்ல சுகம் என்பது இருக்காது.

நாலாம் அதிபதியும் பலவீனமடைந்து ஆறு எட்டு பன்னிரெண்டாம் வீடுகளில் இருப்பதும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆறாம் அதிபதி வக்கிரத்தில் இருந்தால் எந்த முன்னேற்றம் இல்லாமல் இருப்பது. அல்லது நோய் குணமாவது போல் இருந்து திடீரென வீரியமடைதல் முதலில் குணமாகிய பின்பு மறுபடியும் நோயின் தாக்கம் ஏற்படும்.

ஆறாம் அதிபதியுடன் ஏழு அல்லது 11 ஆம் அதிபதி தொடர்பு பெறும் பொழுது நோயாளிக்கு தேவையான மருத்துவ உதவி கிடைக்கும் ஏழாம் பாவம் பாதிக்கப்பட்டால் அவர் மருத்துவம் எடுக்க மிகவும் சிரமப்படுவார். ஒன்பதாம் அதிபதி தொடர்பு கொண்டால் மருந்தை உடல் ஏற்றுக்கொள்ளும் திறனையும் மருந்தின் அளவு மருந்தின் செயல்படும் தன்மை போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.

பனிரெண்டாம் அதிபதி தொடர்பு கொண்டால் அடிக்கடி மருத்துவ முறைகளை மாற்றுதல் மருத்துவமனை மற்றும் மருந்துகளை மாற்றுதல் ஏற்படும். அவர் மருத்துவமனையில் தங்கி மருத்துவமெடுக்கும் சூழ்நிலை உருவாகும். ஜாதகருக்கு நோயால் ஏற்பட்ட நிம்மதியின்மை மனக்கசப்பு வருத்தம் தூக்கமின்மை போன்றவற்றை சுட்டிக்காட்டும்.

நோயிலிருந்து மீளுதல் 4,11
நான்காம் இடம் நோயாளியின் சுகம் குணமடைவதையும் 11ஆம் இடம் நோயாளியின் நோயில் இருந்து குணமடைவதை குறிக்கும் பதினொன்றாம் இடத்தில் பாவ கிரகங்கள் இல்லாமல் 11 ஆம் அதிபதி கெடாமலும் இருந்து நோய் குணமாடல் அது பூரண குணமாகும் பாவ கிரகங்கள் இருந்தால் நோயின் தன்மை இன்னும் பூரணமாக வெளியேறவில்லை மறுபடியும் தீய கோச்சார காலத்தில் அல்லது தீய திசா புத்தி காலத்தில் மறுபடியும் அதே நோய் வரும் என்பதை காட்டுகிறது.

நோய் ஏற்படும் தசா புத்தி அந்தரம்

ஆறாம் அதிபதியின் தசா புத்தி அந்தரம் நடக்கும் காலங்களில் நோய் ஏற்படுகிறது. ஆறாம் வீட்டில் நிற்க கிரகங்களின் தசா புத்தி அந்தரம் நடக்கும் காலங்களிலும் நோய் ஏற்படும்.

சந்திரனின் மீது கோச்சாரத்தில் ஆறாம் அதிபதி வரும் காலங்களில் நோய் வருகின்றது இவ்வாறு வந்த நோய் உடல் அளவில் பாதிப்பு ஏற்படுத்தி விட்டு சரியாகி விடும்.

கோச்சாரத்தின் கிரகங்களால் ஏற்படும்நோய் அதனுடைய காலம் குறைந்த அளவே அதுவே திசா புத்தியாக செயல்படும் போது மட்டும் நீண்ட நாள் ஜாதகர் நோயால் அவதிப்படுவார்.

இந்த நோயிலிருந்து விடுபட தன்வந்திரி பகவானை வழிபாடு செய்வதும். மருத்துவ கடவுளான வைத்தீஸ்வரன் கோவில் வழிபாடு செய்வதும் சிறப்பாக பலனை தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed