

பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை பாதுகாக்க பசுமைத் தாயகம் சார்பில் கையெழுத்து இயக்கம்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
சென்னை: பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை பாதுகாக்க வலியுறுத்தி, பசுமைத் தாயகம் சார்பில் கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பரப்புரை, 19.07.2026 அன்று சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தலைவரும், பசுமைத் தாயகம் அமைப்பின் ஆலோசகருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ், எம்.பி. மற்றும் பசுமைத் தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி, எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்று கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.
பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் நீர்வளச் சமநிலையை காக்க வேண்டிய அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த பரப்புரை முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் போது, அக்னிப்புரட்சி இதழின் ஆசிரியர் த. நாராயணசாமி அவர்கள், அக்னிப்புரட்சி – ஜூலை 2026 மாத இதழை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களிடம் வழங்கினார்.
இந்நிகழ்வில் பசுமைத் தாயகம் நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு கையெழுத்து இயக்கத்திற்கு தங்களது ஆதரவை பதிவு செய்தனர்.
✒️ செய்தியாளர் நா.மணிவண்ணன்
புதியநாளிதழ்
கல்வி டுடே
மோட்டார் டுடே
அக்னிப்புரட்சி
Akkappore.News
இணைய நாளிதழ் செய்தி ஆசிரியர்.
SpotlightTamilnadu

