வாடிப்பட்டி அருகே
இலவச மர வங்கி துவக்க விழா …
N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ்,
Akkappore.news
Akkappore.com
……………………..
Just CliCK now
*உண்மை செய்திகள் உடனுக்குடன்…*
*உங்கள் உள்ளங்கையில்…*
*உலக தமிழர்கள் போர்க்குரல்….!!*
*மக்கள் சேவையில்…*
……………………………..
*நெஞ்சம் நிமிர்ந்து நேர்படப் பேசும்…..*
🌹
வாடிப்பட்டி, பிப்.28.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரு கே சாணாம்பட்டியில் பார்வை பவுண்டேஷன் சார்பாக 50 ஆயிரம் மரக்கன்றுகள் கொண்ட இலவச முதல் மர வங்கி துவக்க விழா நடந்தது. இந்த விழாவிற்கு வேளாண்மை விஞ்ஞா னி டாக்டர் சுப்பிரமணியம்
யோகி தலைமை தாங்கினார். கவிஞர் பொன். பனகல் பொன்னையா, அகவிழி கோபி சுவாதி,தங்கச் சித்ரா ஆகி யோர் முன்னிலை வகித்தனர். சாலமன் வரவேற்றார். இலவச மர வங்கியை ஜனனி பூரணம் அம்மாள் துவக்கி வைத்தார்.


இந்த விழாவில்,
பார்வை பவுண்டேஷன் நிறுவனர் பொறியாளர் சோழன் குபேந்திரன் கொய்யா, நெல்லி, மாதுளை, நாவல், தென்னை மற்றும் தேக்கு, வேங்கை, புளி, பூவரசு, புங்கை உள்ளிட்ட 25 வகையுடன் 50 ஆயிரம் மரக்கன்றுகள் இலவசமாக விவசாயிகளுக்கும்,மரம் வளர்க்கும் ஆர்வலர்களுக்கும் வழங்கப்பட உள்ளது என்று அவர் பேசினார். கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற தலைவர் சொக்கலிங்கம் இயற்கையும் மரங்களையும் காப்போம் என்ற தலைப்பில் பேசினார். இயற்கை ஆர்வலர்கள் தங்கராஜ், சகோதரி ஞான சிகாமணி ஆகியோர் வாழ்த்தி பேசினர்



.
இதில் ,
ஏராளமான விவசாயிகள் மற்றும் வன நலம் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில், ராஜ்குமார்
நன்றி கூறினார்.
.
N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ்,
Akkappore.com
……………………..
Just CliCK now
*உண்மை செய்திகள் உடனுக்குடன்…*
*உங்கள் உள்ளங்கையில்…*
*உலக தமிழர்கள் போர்க்குரல்….!!*
*மக்கள் சேவையில்…*
……………………………..
*நெஞ்சம் நிமிர்ந்து நேர்படப் பேசும்…..*
🌹
