N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ் Akkappore.com
/ Just CliCK now

N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ் Akkappore.com
/ Just CliCK now

பரவையில்
இலவச தையல் பயிற்சி துவக்கம் :

வாடிப்பட்டி, பிப்.15-

மதுரை மாவட்டம், பரவை அண்ணாநகர் பகுதியில் ஸ்ரீ மீனாட்சி மில் ஜி எச் சி எல் அறக்கட்டளை சார்பாக பெண்களுக்கு 1மாத கால இலவச தையல் பயிற்சி துவக்க விழா நடந்தது. இந்த விழாவிற்கு,
வார்டு கவுன்சிலர் திருஞானகரசி தலைமை தாங்கி,
குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். சமூக நல ஆர்வலர் திருப்பதி முன்னிலை வகித்தார். ஜி எச் சி எல் அறக்கட்டளை முதுநிலை மேலாளர் நிதி அலுவலர் சுஜின் தர்மராஜ் பயிற்சி திட்டங்களைப் பற்றியும் பயிற்சி திட்ட நோக்கங்களையும் எடுத்து கூறி பயிற்சிக்கு தேவையான உபகரணங்களை வழங்கினார் .

இதில் ,
பெட் கிராட்நிர்வாக இயக்குனர் சுப்புராமன் பயிற்சியில் பெண்கள் சுயதொழில் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை அடைந்திட வேண்டும் என்று பேசினார்.
பெட்கிராட் துணை தலைவர் சுசிலா குணசீலி இப் பயிற்சியின் மூலம் பெண்கள் சுயதொழில் தொடங்கி பொருளாதார மாற்றம் ஏற்படும் என்று பேசினார்.
பயிற்சியாளர் விஜயவள்ளி பயிற்சியில் வரும் 23 தையல் வகைகள் மற்றும் வடிவங்கள் பயிற்சிகள் கற்றுத் தரப்படும் என்று கூறினார்.
இதன்
நிகழ்ச்சி
ஏற்பட்டினை,
பெட்கிராட் ஒருங்கிணைப்பாளர் கண்ணன் ஏற்பாடு செய்திருந்தார். முடிவில்,
அலுவலர் ரஞ்சித்
நன்றி கூறினார்.

N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ் Akkappore.com
/ Just CliCK now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed