எந்த முறை வந்த போதும் இல்லாத மகிழ்வுடன் இந்த முறை பாரதப் பிரதமர் மோடி மிகுந்த மகிழ்ச்சியுடன் டெல்லி திரும்பினார்…!!
பிரபல அரசியலாளர், வழக்கறிஞர், ‘அக்கப்போர்’ நாளிதழ் சிறப்பாசிரியர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அக்கப்போர் நாளிதழ் Akkappore.com / சொடுக்குங்க

எந்த முறை வந்த போதும் இல்லாத மகிழ்வுடன் இந்த முறை பாரதப் பிரதமர் மோடி மிகுந்த மகிழ்ச்சியுடன் டெல்லி திரும்பினார்.

அவர் சென்னை விமான நிலையத்தில் இறங்கும் பொழுதே தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்களின கரத்தையும் அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி திரு பழனிச்சாமி அவர்களின் கரத்தையும் தன் இருகரங்களோடு பற்றி இந்தக் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று மூவர் கரங்களையும் வானில் உயர்த்தி ஆர்ப்பரித்தார்.

பொதுவாகவே பிரதமருக்கு தமிழ்நாடு, தமிழ் மீதும் மிகுந்த ஈடுபாடு உண்டு . அத்துடன் அருகே உள்ள கேரளா மாநிலத்தின் இயற்கை அழகு அது இந்தியாவின் எத்தனை அழகான பிரதேசம் என்கிற பெருமிதமும் அவருக்கு உண்டு!

இந்த இரு மாநிலங்களிலும் குறிப்பாக தமிழ் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி வளர்ச்சி பெற வேண்டும் வட மாநிலங்களில் நிலவும் வளர்ச்சிப் பணிகள் போல தமிழ்நாடு அதன் வளர்ச்சிப் பணிகளில் குறிப்பிட்ட பங்கினை கூடுதலாகப் பெற்று சிறக்க வேண்டும்!

இங்கு இருக்கக்கூடிய சுயலாப ஊழல் கூட்டணிகளை தாண்டி பல்வேறு புதிய தொழில் முறைகள் வேலைவாய்ப்புகள் கல்வி சுகாதார விகிதங்களைத் தமிழ்நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்பதில் அக்கறை கலந்த தனது விருப்பத்தையும் ஆர்வத்தையும் இந்த சுற்று பயணத்தின் மூலம் தெரிவித்துக் கொண்டார்.

அனைத்து நிர்வாகிகளுக்கும் அது மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையோடு கூடிய உற்சாகத்தையும் தந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed