ஞான பீட விருது 1965 – மலையாளம் – எழுத்தாளர் சங்கர குருப் முதல் 2026 தமிழ் -கவிஞர் வைரமுத்து வரை…!! இதுவரை 60 பேர்- கடந்த வந்த பாதை…!! வரலாறு என்ன?தலைமைக்கழக பேச்சாளர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

ஞான பீட விருது 1965 – மலையாளம் – எழுத்தாளர் சங்கர குருப் முதல் 2026 தமிழ் -கவிஞர் வைரமுத்து வரை…!! இதுவரை 60 பேர்- கடந்த வந்த பாதை…!! வரலாறு என்ன? திமுக தலைமைக்கழக பேச்சாளர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

நண்பர்களே!வணக்கம்!

எல்லா புகழும் எம்பெருமான் தலைவர் கலைஞர் அவர்களுக்கே!

ஞான பீட பரிசு


நண்பர்களே!

இந்தியாவின்
மிக உயர்ந்த இலக்கிய விருதுகளில் ஒன்றான

பாரதிய ஞான பீட அமைப்பால் வழங்கப்படுகிற

ஞானபீட விருது
இந்த ஆண்டு
கவிப்பேரரசு அண்ணன் வைரமுத்து அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது .

கவிப்பேரரசு அவர்களுடன்
30 வருடங்களாக
நட்பு -தொடர்பு

அவரோடு கவியரங்கத்தில்
பங்கு பெற்றதும்

அவர் தலைமையில்
கவிதை பாடியதும்
என்பதை தாண்டி

தனிப்பட்ட முறையில்
அவர் மீது நானும்
என் மீது அவரும் கொண்டிருக்கிற அன்பின் காரணமாக

ஞான பீட விருதுக்கு
மிகவும் தகுதியான அவருக்கு கிடைத்திருப்பதில்
மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்.

பூவுடன் சேர்ந்த நார்
பொன்னுடன் சேர்ந்த செம்பு
பெருங்கடலில் சிறு துளி நீராக

அவருடைய
நட்பு வட்டாரத்தில்
கவிதை பட்டாளத்தில் இருக்கிற
ஒருவனாக
மனம் மகிழ்ந்து நிறைந்திருக்கிறேன்.

நண்பர்களே!

ஞானபீட விருது என்பது
இந்திய இலக்கியத்திற்கு

இந்தியாவை சேர்ந்த
இந்தியாவைதாய் நாடாக கொண்ட
இந்திய குடிமகனான
ஒரு எழுத்தாளர்
தன்னுடைய வாழ்நாள் பங்களிப்பை வழங்கி இருக்கிறார் என்பதை பாராட்டி
கௌரவித்து
வழங்கப்படுகிற விருதாகும்

தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்களை வெளியிடுகின்ற
Bennett Coleman & Co Ltd (BCCL)
சகு ஜெயின் என்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் இவ்விருது
தோற்றுவிக்கப்பட்டது

1961இல் இந்திய மொழிகளின் சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுத்து

சிறந்த நூலுக்கான விருது வழங்க வேண்டும் என நினைத்து

1961 நவம்பர் மாத இறுதியில்
பாரதிய ஞான பீடத்தை
தோற்று வித்த

ரமா ஜெயின்
சில இலக்கிய வல்லுநர்களை அழைத்து இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டார்

இதற்கிடையில்
28-2.1963
ரமாஜெயின்காலமாகிவிட

காகா காலோர்கள்
மற்றும்
சம்பூர்ண நந்தர் ஆகியோரை தற்காலிக நிறுவனர்களாக
குழு நிர்ணயம் செய்தது

முதல் தேர்வுக்குழு உறுப்பினர்களாக

நிரஞ்சன் ராய்
கரண் சிங்
ஆர்.ஆர். திவாகர்
வி. ராகவன்
பி கோபால் ரெட்டி ஹரே கிருஷ்ணா மகாதேவ்
ரமா ஜெயின் மற்றும்
லட்சுமி சந்திராஜயின்
ஆகியோர் இருந்தனர்

சம்பூர்ண நந்தர்
தலைவராக செயல்பட்டார்

19 21 முதல் 1951 வரையிலான
காலங்களில்எழுதப்பட்டநூல்களை
முதல் விருதுக்கான
பரிசீலனைக்கு
எடுத்து கொண்டனர்


பொதுவாக இந்தவிருதிற்காக
பல இலக்கிய வல்லுனர்கள்
ஆசிரியர்கள்
பல்கலைகழங்கள்
பல மொழிகளைச் சேர்ந்த சங்கங்கள்
விமர்சகர்கள் போன்றவர்களிடமிருந்து பரிந்துரைகள் பெறப்படுகின்றன

தற்சமயம் விருது பெற்ற
ஒருவரின் நூல்களை
அடுத்த இரண்டு வருடத்திற்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது

தேர்வுக் குழுவானது
சமூகத்தில் நன்மதிப்பு பெற்ற மற்றும் நேர்மையான
7 முதல் 11 உறுப்பினர்களை கொண்டிருக்கும்

ஒவ்வொரு
உறுப்பினர்களும்
3 ஆண்டுகள்
தேர்வுக்குழு
உறுப்பினர்களாக செயல்படுவர்

தேவைக்கு ஏற்றபடி
அந்த காலத்தை
மேலும்இரு ஆண்டுகளுக்கு
கால நீட்டிப்புச் செய்யலாம்

பரிந்துரைக்கு ஏற்கப்பட்ட நூல்கள் பகுதி அல்லது முழுவதுமாக
இந்தி அல்லது ஆங்கிலம் மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பின்னரே
அதனை ஆலோசனைக் குழுக்கள் மதிப்பீடு செய்பவர்

ஒரு குறிப்பிட்ட ஆண்டுக்கான தேர்வு பெற்றவர்
பற்றிய அறிவிப்பை தேர்வு குழு வெளியிடும்

இதற்கான முழு அதிகாரமும்
தேர்வு குழுவிற்கு உள்ளது

முதல் முதலாக
1965ல்
ஜி. சங்கர குருப் அவர்களுக்கு
ஓடக்குழல் (புல்லாங்குழல்)
என்ற நாவலுக்காக மலையாள மொழிக்கு வழங்கப்பட்டது
தொடர்ந்து

2 – 1966-
வங்காள மொழி
தாரா சங்கர் பந்தோ பத்தியாய்

3-1967 –
கன்னடம்
கே. வி. புட்டப்பா
மற்றும்

(1967) குஜராத்தி
உமா சங்கர் ஜோஜி

4- 1968 –
இந்தி
சுமித்ரானந்தன் பந்த்

5- 1969 –
உருது
நக்மா

6- 1970
தெலுங்கு
விஸ்வநாத சத்ய நாராயணி

7- 1972-
வங்காளம்
ஸ்ம்ருதி சட்ட பவிஷ்யத்

8- 1973
கன்னடம்
தாத்தாத்ரேய ராமச்சந்திரன் பிந்த்ரே
மற்றும்

  • 1973 – ஒரியா
    கோபிநாத் மொஹந்தி

9-1974
மராத்தி
விஷ்ணு சகரம் காண்டேகர்

10- 1975-
தமிழ்
அகிலன்

11- 1976 –
வங்காளம்
ஆஷாபூர்ணாதேவி

12 – 1977 –
கன்னடம்
க.சிவராம் கரந்த்

13-1978-
இந்தி
ச.ஹ.வ. அஜ்னேயா

14 – 1979 –
அஸ்ஸாமி
பிரேந்தரகுமார் பட்டாச்சார்யா

15- 1980
மலையாளம்
ச.க. பொட்டிக்கட்

16- 1981
பஞ்சாபி
அம்ரிதா பிரீதம்

17-1982
இந்தி
மஹாதேவிவர்மா

18- 1983 –
கன்னடம்
மாஸ்தி வெங்கடேச அய்யங்கார்

19- 1984
மலையாளம்
தகழி சிவசங்கரம் பிள்ளை

20 – 1985
குஜராத்தி
பன்னாலால் படேன்

21- 1986
ஒரியா
சச்சிதானந்த் ரௌத்ராய்

22 – 1987
மராத்தி
விஷ்ணு வாமன்ஷிர்வாத்கர்

23-1988 –
தெலுங்கு
சி. நாராயண ரெட்டி

24- 1989
உருது
குர்ராடுலென் ஹைதர்

25-1990 –
கன்னடம்
வி. கோ.கோகாக்

26 – 1991 –
வங்காளம்
சுபாஷ் முகோ பாத்யாய்

27 – 1992
ஹிந்தி
நரேஷ் மெத்தா

28 – 1993
ஒரியா
சீதா காந்த் மஹாபாத்ரா

29-1994-
கன்னடம்
உ. இரா. ஆனந்த மூர்த்தி

30- 1995
மலையாளம்
எம்.டி. வாசுதேவன் நாயர்

3 1 – 1996
வங்காளம்
மகாசு வேதாதேவி

32 – 1997 –
உருது
அலிசர்தார் ஜாப்ரி

33 – 1998
கன்னடம்
கிரீஷ் கர்னாட்

34 – 1999 இந்தி
நிர்மல் வர்மா
மற்றும்

  • 1999 – பஞ்சாபி
    குர்தியால்சிங்

35- 2000.
அஸ்ஸாமி
இந்திரா கோ ஸ்வாமி

36- 2001
குஜராத்தி
ராஜேந்திர கே ஷவ் லால்

37- 2002 –
தமிழ் ஜெயகாந்தன்

38 – 2003
மராத்தி
விந்தா கரண்டிகர்

  1. 2004-
    காஷ்மீரி
    ரகுமான் ராகி

40-2005
இந்தி
கண்வர் நாராயண்

4 1 . 2006 –
கொங்கணி
ரவீந்திர கேல்கர்
மற்றும்

  • 2006 – சமஸ்கிருதம்
    சத்திய விரத் சாஸ்திரி

4 2 -2007
மலையாளம்
ஓ.என்.வி. குரூப்

43 -2008 –
உருது
அக்லக் முகமது கான்
ஷாஹ் ரியார்

44-2009 –
இந்தி
அமர் காந்த் +
ஸ்ரீ லால் சுக்லா

45-.2010 –
கன்னடம்
சந்திரசேகர கம்பரா

46 –2011-
ஒரியா
பிரதிபாரே

47 – 2012-
தெலுங்கு
ரவுரி பாரத்வாஜா

48 – 2013 –
இந்தி
கேதார நரத் சிங்

49- 2014
மராத்தி
பாலசந்திர நெமதே

50-2015
குஜராத்தி
ரகுவீர் சவுத்ரி

51- 2016
வங்காளம்
ஷங்கா கோஷ்

52 -2017 –
இந்தி
கிருஷ்ணா சோப்தி

53 – 2018
ஆங்கிலம் –
அமிதவ் கோசு.

54 -2019 –
மலையாளம்
அக்கித்தம் அச்சுதன்
நம்பூதிரி

55-2021-
அசாமி
நீல் மனி பூக்கன்

56 -.2022 –
கொங்கணி
தாமோதர் மவுசோ

57.2023 உருது +
குல்சார்

58 – 2024 – சமஸ்கிருதம்
ராமபத்ராச்சார்யா இருவருக்கு

59-2024 இந்தி
வினோத் குமார் சுக்லா

என இதுவரை விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது

எழுத்தாளர்கள்
மரணத்திற்கு பிறகு
எவருக்கும்
இந்த விருது வழங்கப்பட மாட்டாது

இந்தியில் 12
கன்னடம் 8
வங்காளம் 6
மலையாளம் 6
உருது 5
குஜராத்தி 4
மராத்தி 4
ஒடியா 4
அசாமி 3
தெலுங்கு ……. 3
கொங்கணி …. 3
பஞ்சாபி ……….. 3
சமஸ்கிருதம் …3
தமிழ் ……………… 3 இவ்வருட விருதும்
ஆங்கிலம் …….. 1 சேர்த்து
காஷ்மீர் ……… 1

1982 வரை இந்த விருது
கதை நாவல் கவிதை என
ஒரு குறிப்பிட்ட படைப்பிற்காக வழங்கப்பட்டது

அதன் பிறகு இலக்கியத்திற்கான ஒரு எழுத்தாளரின்
ஒட்டுமொத்த பங்களிப்புக்காக
இது வழங்கப்பட்டது

அதன் பின்னர்
இந்த விருது பொதுவாக ஒவ்வொரு
ஆண்டும் ஒரு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது

இருப்பினும்
சில ஆண்டுகளில்
இது இரண்டு பேருக்கு
கூட்டாகவும் வழங்கப்படுகிறது

1965 லிருந்து ஆரம்பித்து
இதுவரை 58 நபர்களுக்கு
இந்த விருதுகள் வழங்கப்பட்டு இருக்கிறது

ஒவ்வொரு ஆண்டும்
இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட 15 மொழிகள் சிறந்த எழுத்தாளருக்கு வழங்கப்படுகிற விருதாகும்

இந்தியாவின் முதல்
இந்திய குடியரசுத் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத்

இந்தியாவின் சிறந்த எழுத்தாளருக்கு எழுத்தாளருக்கு ஒவ்வொரு ஆண்டும்

விருது வழங்கி பெருமைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதின் விளைவாக உருவானது தான்
இந்த பாரதிய ஞான பீடம் பண்பாட்டு இலக்கிய கழகம்

தங்கமும் செம்பும் கலந்த பட்டயமும்
பாராட்டு பத்திரமும்
பித்தளையாலான ஒரு சரஸ்வதி சிலையையும்
பதினோரு லட்சம் ரூபாய் ரொக்கமும்
உள்ளடக்கியது

இதுவரை இந்தி மொழி எழுத்தாளர்கள் தான்
அதிகபட்சமாக
11 முறை இந்து விருதுகளை
பெற்றிருக்கிறார்கள்

அதில் ஏழு பேர் பெண்கள் ஆவார்கள்
ஆஷா பூர்ணா தேவி
இந்த விருதைப் பெற்ற
முதல் பெண் எழுத்தாளராக
அறியப்படுகிறார்

தமிழில் முதல் முதலாக
1975இல் சித்திரப்பாவை நாவலுக்காக அகிலனுக்கு
இவ் விருது வழங்கப்பட்டது

அதன் பிறகு தமிழில்
இவ்விருதை இரண்டாவதாக
2002ல் பெற்றவர்
எழுத்தாளர் ஜெயகாந்தன்

சில நேரங்களில்
சில மனிதர்கள் நாவலுக்காகவும்
ஒரு மனிதன்
ஒரு வீடு
ஒரு உலகம் போன்ற படைப்புகளுக்காகவும் அறியப்பட்டாலும்

ஞானபீட விருது
அவரது ஒட்டுமொத்த படைப்புகளையும் கௌரவிக்கும் வகையில் வழங்கப்பட்டது

அவரைப் பொறுத்தவரை
அது தாமதமாக வந்தாலும்
தகுதி குறித்து வந்ததே
இந்த விருது என்று தமிழகம்
போற்றி புகழ்ந்தது

இம்முறை
கவிப்பேரரசுவைரமுத்து
அவர்களுக்கு கிடைத்த
இந்த விருது

” இலக்கியத்திற்கு
பெரிதினும் பெரிது

தமிழுக்கு
அரிதினும் அரிது “
என்றுஅவரே சொன்னது போல்

இந்த விருதுஅவர் வயதை குறைத்து இருக்கிறது

இனி அவர் பயணம் புதிய பாய்ச்சலோடுநோபல் பரிசை நோக்கிபாயட்டும்.

மீண்டும்
கவிப்பேரரசு அண்ணன் வைரமுத்து அவர்களுக்கு
என் வாழ்த்துக்கள்

நண்பர்களே
நாளை சந்திப்போம்

அன்புள்ள
சாவல்பூண்டி மா.சுந்தரேசன்
15 – 3 – 2026


அறியாமை
அடிமைத்தனம்
விலக்கு |

பகுத்தறிவு
சுயமரியாதை
பழக்கு |

மானமும்
அறிவும்
மனிதர்க்கு அழகு |


i

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top