

பொதுவாக என்னை சந்திப்பவர்கள் மனஅழுத்தம், பதட்டம், மனச்சோர்வு, உறவு பிரச்சனைகள் போன்ற காரணங்களுக்காகத்தான் வருவார்கள். ஆனால் ஒரு நாள் ஒரு இளம் பெண் என்னை சந்தித்தார்.
அவர் என்னிடம் சொன்ன முதல் வார்த்தை, “Mam… எனக்கு உடல் எடையை குறைக்க வேண்டும்.” நான் கேட்டேன், “உங்கள் உடல் எடைதான் உங்களுக்கு பெரிய stress ஆ?” அவர் அமைதியாக, “ஆமாம்… என் உடல் எடையே எனக்கு மனஅழுத்தமாக மாறிவிட்டது.” என்றார். அவரிடம் மெதுவாக பேச ஆரம்பித்தேன்.
சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு அதிகமான மனஅழுத்தம், தொடர்ந்து வரும் எண்ணங்கள், OCD அறிகுறிகள் இருந்தன. அதனால் மருத்துவரை சந்தித்து மருந்து எடுத்தார். அந்த மருந்துகளால், சில ஆண்டுகளில் அவரது உடல் எடை மிகவும் அதிகரித்தது. மனநலப் பிரச்சனைகளால் வேலைக்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்தார்.
மனஅழுத்தம் அதிகரிக்கும்போது அடிக்கடி சாப்பிடும் பழக்கம் உருவானது. அதனால் உடல் எடையும் தொடர்ந்து உயர்ந்தது. அவருடைய வாழ்க்கையை ஆழமாகப் புரிந்துகொண்டபோது, சிறு வயதில் பள்ளியில் அடித்த தண்டனைகள், நண்பர்களால் ஏற்பட்ட காயங்கள், விடுதியில் இருந்தபோது ஏற்பட்ட மனவேதனைகள் போன்ற பல தீராத அனுபவங்கள் அவரது மனதில் இன்னும் இருந்தன. நாம் பல நேரங்களில் உடல் எடையை மட்டுமே பார்க்கிறோம்.
ஆனால் பலருக்கு உண்மையான பிரச்சனை உணவு அல்ல… தீராத மனஅழுத்தம். ஒருவர் நீண்ட நாட்களாக மனஅழுத்தத்தில் இருந்தால், உடலில் கார்டிசால் (Cortisol) என்ற மனஅழுத்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும். அந்த நேரத்தில் மனம் இயற்கையாகவே ஆறுதல் தேடும். பலருக்கு அந்த ஆறுதல் உணவின் மூலம் கிடைக்கிறது.
அதனால் தான் சிலர் மனஅழுத்தத்தில் இருக்கும்போது அதிகமாக சாப்பிட ஆரம்பிக்கிறார்கள். அதனால் உடல் எடையை மட்டும் குறைக்க முயற்சிப்பதை விட, முதலில் மனஅழுத்தத்தின் காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். அவருடைய மனஅழுத்தத்தின் வேரை கண்டுபிடித்தோம். பழைய மனக்காயங்களை புரிந்துகொண்டோம்.
அதிகமாக யோசிக்கும் பழக்கத்தை குறைத்தோம். பயத்தின் அடிப்படையிலான சிந்தனையிலிருந்து, தேவையை அடிப்படையாகக் கொண்ட சிந்தனைக்கு அவரை மெதுவாக மாற்றினோம். மனம் அமைதியாக ஆரம்பித்தபோது, உணவை ஆறுதலாக பயன்படுத்த வேண்டிய தேவை குறைந்தது. சில மாதங்களில் அவரது OCD அறிகுறிகளும் குறைந்தன. மனச்சோர்வும் குறைந்தது. அதோடு, உடல் எடையும் இயல்பாக குறைய ஆரம்பித்தது. இதேபோல இன்னொரு நபரும் என்னை சந்தித்தார். திருமணமானவர். சில பெண்களிடம் சாதாரணமாக பேசினால்கூட மிகுந்த குற்ற உணர்வில் வாழ்ந்தார்.
அந்த மனஅழுத்தத்தால் அதிகமாக சாப்பிட்டு உடல் பருமனாகிவிட்டார். அவருடைய வாழ்க்கையை ஆராய்ந்தபோது, சிறு வயதில் அவரது தந்தைக்கு திருமணத்திற்கு வெளியே உறவு இருந்தது. அதனால் “இப்படி செய்வது மிகவும் தவறு” என்ற ஆழமான நம்பிக்கை அவரது மனதில் பதிந்திருந்தது. அந்த பழைய அனுபவமே இன்று சாதாரண நிகழ்வுகளைக்கூட மிகப்பெரிய குற்ற உணர்வாக மாற்றி, மனஅழுத்தத்தை உருவாக்கியது.
அந்த வேரை அவர் புரிந்துகொண்டபிறகு, தனது கவனத்தை மனைவியுடன் நல்ல புரிதல், நம்பிக்கை, அன்பு, நெருக்கம் ஆகியவற்றை வளர்ப்பதில் செலுத்த ஆரம்பித்தார். மனஅழுத்தம் குறைந்தது. அதிகமாக சாப்பிடும் பழக்கம் குறைந்தது. உடல் எடையும் மெதுவாக குறைய ஆரம்பித்தது.
அதனால், உடல் பருமன் என்பது எல்லா நேரத்திலும் உணவின் பிரச்சனை மட்டும் அல்ல. பல நேரங்களில் அதன் பின்னால் தீராத மனஅழுத்தம், பழைய மனக்காயங்கள், குற்ற உணர்வு, பதட்டம், மனச்சோர்வு அல்லது உணர்ச்சிகளை சமாளிக்க முடியாத நிலை இருக்கலாம்.
அந்த வேரை புரிந்துகொண்டு மனதை மாற்ற ஆரம்பித்தால், உடலும் மெதுவாக மாற்றத்தை காண ஆரம்பிக்கும். நீங்களும் உடல் பருமன், மனஅழுத்தம், அதிக சிந்தனை அல்லது உணர்ச்சி காரணமாக அதிகமாக சாப்பிடும் பழக்கத்தால் சிரமப்படுகிறீர்கள் என்றால், உங்கள் உடலை மட்டுமல்ல…
உங்கள் மனதையும் கவனியுங்கள். ஏனெனில் உண்மையான மாற்றம் மனதில் ஆரம்பிக்கிறது. உங்களின் மனஅழுத்தத்தின் வேரை கண்டுபிடித்து, மனதையும் உடலையும் ஒன்றாக மாற்ற விரும்பினால், என்னுடைய பத்துநாள் பயிற்சியில் கலந்துகொள்ளுங்கள். https://chat.whatsapp.com/HFCiRmb9KZyLYfgxZ6qVJA?mode=gi_t
Dr. Mehar Nithyan, PhD.
Psychology Director
– Calmscious Psychotherapy
Clinic @918838 428286



