வாழ்க்கையில் பிரச்சனைகள், தடைகள் நீங்க ஆண், பெண்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்…!! ஜோதிடம் அறிவோம் தொடர் – 11 கோவை ஜோதிட கலையரசி M.தனம் B.A., போன் : 90802 73877 ஸ்ரீ தனம் ஜோதிட நிலையம். அக்கப்போர் நாளிதழ்* akkappore.news …. சொடுக்குங்க

ஒருவருடைய ஜாதகத்தில் லக்னம் ராசி நட்சத்திரம் திதி எப்படி முக்கியமாக நாம் எடுத்துக் கொள்வோமோ அதே போல் கரணத்தையும் நாம் எடுத்துக் கொண்டு அதற்குரிய தெய்வத்தை வழிபாடு செய்து வந்தால் எளிதில் சுப பலன்களையும் அடையலாம்.

ஒருவருடைய ஜாதகத்தில் கரணத்தை எப்படி எடுப்பது. கரணம் ஒருவர்உ டைய ஜாதகத்தில் எப்படி வேலை செய்யும் என்பதை பற்றி பார்க்கலாம்.

ஐந்து அங்கங்கள் கொண்டது பஞ்சாங்கம் ஆகும். நெருப்பு, நிலம், காற்று, நீர், ஆகாயம் என ஐந்து பூதங்களில் தத்துவமாகவே பஞ்சாங்கம் உள்ளது.

  1. நெருப்பு தத்துவத்தை கிழமையும் ,
  2. நிலத்தத்துவத்தை திதியையும்,
  3. காற்று தத்துவத்தை காரணமும்,
  4. ஆகாயத் தத்துவத்தை யோகமும் விளங்குகிறது.
    உடலும் பஞ்சபூதங்களால் ஆனது. இதேபோல் பஞ்சாங்க கூறுகளும் உடல் கூறுகளோடு பொருந்திப் போகும்.

கரணங்கள் 11 ஆகும் இதில் சர கரணம் 7 ஸ்திர கரணம் 4ஆக இருக்கிறது

இவற்றில் சர கரணம் ஏழும் நன்மை தரக்கூடியது.ஸ்திர கரணம் நான்கும் தீமை தரக்கூடியது .

கரணங்கள் 11

1.பவம்
2.பாலவம்
3.கெளலவம்
4.தைதுலை
5.கரசை
6.வணிசை
7.பத்திரை
8.சகுனி
9.நாகவம்
10.சதுஷ்பாதம்
11.கிம்ஸ்துக்னம்
என்ற 11 கரணம் உள்ளது.

ஒவ்வொரு கரணத்தில் பிறந்த ஒவ்வொருவரும் அந்த கரணத்துக்குரிய அதிதேவதையும் வழிபாடு செய்து மலர்களையும் வஸ்திரங்களையும் பயன்படுத்துவது சிறந்தது .

கரணத்திற்குஉரிய அந்த மிருகத்திற்கு உணவு அளிப்பது மூலமாக நல்ல பலன்களை அடையலாம்

கரணத்திற்கு வாசனை
என்ற ஒரு அர்த்தமும்உண்டு.
ஒரு திதியில் பாதியே கரணம் ஆகும் . ஆறு பாகை கொண்டது ஒரு கரணம் ஆகும்.

11 கரணங்களில் ஜனிக்கும் மனிதர்கள் கரணங்களை குறிக்கும் பறவைகள் மிருகங்கள் ஊர்வனவற்றின் குணாதிசயங்களையும் உணர்வுகளையும் செயல் பாடுகளின் குணங்களையும் தன்னகத்தே பெற்றவர்களாக இருப்பார்கள்

முதல் கரணம் பவம்

அதி தேவதை-இந்திரன், தேவேந்திரன்.

மிருகம்-சிங்கம்

கிரகம்-செவ்வாய்

மலர் -புன்னைமலர்

தெய்வம் -நரசிம்மர், ஸ்ரீ அனுமான்

வழிபாடு முறை

புன்னை மலர்களை வைத்து ப்பூஜிக்கச் செய்யலாம்.

தோட்டத்தில் புன்னை மரங்களை வளர்க்கலாம்

பிரச்சனைகள் வரும்போது கரண நாதனை வழிபட்டு அன்னதானம் வழங்கலாம்.

கோயிலுக்கு போனால் அன்னதானம் நடந்தால் அலட்சியப்படுத்தாமல் உணவு வருந்தி வரலாம்.

பெண்களாக இருந்தால் கஸ்தூரி மஞ்சள் பூசி க்குளிக்கலாம்.

ஆண்களாக இருந்தால் வழிபடும் தெய்வத்திற்கு கஸ்தூரி மஞ்சளை அபிஷேகத்திற்கு கொடுக்கலாம்.

பிரச்சனை வரும் காலகட்டத்தில் மஞ்சளை பூசி அல்லது அபிஷேகத்திற்கு கொடுத்து வந்தால் உங்களுடைய பிரச்சனைகள் எளிதில் தீர்ந்து விடும்.

வீட்டில் பூஜை செய்யும் பொழுது அகில் கட்டைகளை சாம்பிராணியுடன் கலந்து தூபம் போட வேண்டும்.

இந்த பரிகாரம் செய்யும் போது வெள்ளை ஆடைகளை அணியலாம்.
வெளியே ஒரு காரியத்துக்காக செல்லும் பொழுது அல்லது பெரியோர்களை சந்திக்கும் பொழுது வெள்ளை ஆடைகளை அணிந்து போகலாம்.

இது ஒரு சிறப்பான சந்திப்பு ஏற்படுத்தி தருவதற்கு உதவும். இப்படி பவ கரணத்தில் குறியீடுகள் பொருட்களை பயன்படுத்தலாம்.

பவகரணத்தில் பிறந்த நபர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

ஒரு ஆண் ஜாதகர் பவகரணத்தில் பிறந்திருந்தால் அவர் பல வருடங்கள் சரியாக வேலை அமையாமல் இருக்கும். அப்படி வேலைக்கு போகும் பட்சத்தில் வேலை செய்யும் இடத்தில் சில பிரச்சினைகள் ஏற்படும்.
இவருக்கு தாயார் அல்லது மனைவியின் மூலம் பண உதவிகள் கிடைக்கும்.

பவகரணத்தின் குணங்கள்

இக்கரணத்தில் பிறந்த ஆண்களை விட பெண்கள் வேகமாக இருப்பார்கள். ஆனால் ஒரு காரியம் முடியும் போது ஆண்களின் உதவி நிச்சயம் தேவைப்படுகிறது. பவகரணத்தில் பிறந்தவர்கள் அதிக எடை கொண்டவர்களாக இருப்பார்கள் அதனால் எளிதில் மூட்டுத் தேய்மானம் ஆகிறது

. இந்தக் கரணத்தில் பிறந்தவர்கள் தைரியமானவர்கள் பெரியோர்களிடம் பாராட்டும் பரிசும் பெறுபவர்கள் ஆகவே இருப்பார்கள் இவர்கள் கலந்து கொண்ட பல போட்டிகள் வெற்றி பெறுவார்கள்.

சுகத்தின் மீது மட்டுமே ஈர்ப்புடைய பூரண சுகவாசிகளாகவே இருப்பார்கள். இவர்கள் செய்யும் பல வேலைகள் தனித்தன்மை வாய்ந்ததாகவும் பிரம்மி மதிக்கத்தக்க க்கூடிய வகையில் சிறப்பானதாக இருக்கும்.

இவர்கள் தங்களது பிரச்சனைகளை தீர்க்கவும் பெரும் உபாசனை சக்தி பெறவும் சிங்கத்தின் மீது அமர்ந்த துர்கா கன்னிகா பரமேஸ்வரி போன்ற பெண் தெய்வங்களை வழிபட வேண்டும்.
இந்த கரணத்தில் பிறந்தவர்கள் அமைதியானவர்களாக இருப்பார்கள்.

இவர்களுக்கு அரசாங்க ஆதரவு எப்பொழுதும் உண்டு. இவர்கள் ஏழ்மை சூழ்நிலையில் பிறந்தாலும் கூட மிகவும் பெருந்தன்மையான பிறவி குணங்களை பெற்றிருப்பார்கள். இவர்கள் பேராசைப்படாமல் தங்களுக்கு கிடைத்ததை கொண்டு தங்களுடைய வாழ்க்கை இனிதாக்கிக் கொள்வார்கள்.

இந்த கரணத்துக்குரிய விளங்கான சிங்கமாக இருப்பதால் வீர தீர சாகசம் புரியும் ராணுவம் ,காவல்துறை ,தீயணைப்புதுறை ,காவல் பணிகள் ,பலரை வழிநடத்தைச் செல்லும் தலைமை பணிகள் போன்ற துறைகளில் இவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்.

இவர்களிடம் தெய்வ நம்பிக்கை குறைவாக இருக்கும் உழைப்பில் இருக்கும் நம்பிக்கை அளவிற்கு தெய்வத்திடம் நம்பிக்கை இருக்காது. எக்காரணத்திலும் பின்வாங்காத தைரியம் உடையவர்கள். எதையும் நுண்ணியமாக கூர்ந்து ஆராய்ச்சி செய்பவர்கள்.

இவர்கள் வழிபடும் தெய்வத்தை கஸ்தூரி மஞ்சளினால் அபிஷேகம் செய்து வெண்மை துணியால் அலங்கரித்து மாணிக்க மாலை அணிவித்து, அன்னம் படைத்து அகில் குச்சியினால் தூபம் காட்டி புன்னை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வர தெய்வம் மனம் குளிர்ந்து கர்ண நாதன் பூரண பலம் அடைகிறது ஜாதகருக்கு அதிக நன்மைகளை அளிக்கிறது

.ஜாதகருக்கு காரியங்கள் நடக்க பலவித தடைகள் இருந்தபோதிலும் காரியங்கள் சாதாரணமாக நடக்க இந்த கரணநாதர் உங்களுக்கு அருள் புரிகிறார்.

அக்கப்போர் நாளிதழ், செய்திப்பிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed